ஆதாரங்களோடு பேசுங்க.. பொய் புகார் சொன்னால் வழக்கு தொடரப்படும் - அண்ணாமலை மீது அமைச்சர் பாய்ச்சல்!
சென்னை : ஆதாரங்களோடு பேச வேண்டும், உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும் என அண்ணாமலைக்கு அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்தார்.
மேலும், அண்ணாமலைக்கு ஏதேனும் அனுமதி தேவைப்படுமெனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஒற்றைச் சாளர முறை
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, "தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 30 நாட்கள் சோதனை முறையில் ஒற்றைச் சாரள முறையில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் மே மாதம் முதல் குறைகள் நிவர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதத்தில் சிஎம்டிஏ சம்பத்தப்பட்ட சேவைகள் மற்றும் அனுமதிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒற்றைச்சாரள முறையில் வழங்கப்படும்.

ஏன் தாமதம்
துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் காரணமாக சேவைகள் வழங்க தாமதமாகிறது. காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகளை தாமதமானாலும் குறைகள் சொல்கின்றனர். விரைந்து முடித்தாலும் குறை கூறுகின்றனர். 37% காலிப் பணியிடங்கள் இருக்கும்போதும் பணிகள் துரிதமாகவே மேற்கொள்ளப்படுகின்றது." எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு
மேலும் பேசிய அவர், "அண்ணாமலை சிஎம்டிஏ தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அண்ணாமலை கூறுவதுபோல் யாருக்கும் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. அவர் சொன்னதில் 90% தேதிகள் பொய்யாக உள்ளது. ஜி ஸ்கொயர் பெயரில் சில விண்ணப்பங்கள் வந்துள்ளன. சட்டப்படி அனைத்து அனுமதிகளும் தந்துள்ளோம். எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை.

சிஇஓ பணியிடம்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிஇஓ பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது போல கூறுகிறார். ஆனால், இந்த பணியிடம் 1978ல் இருந்தே நடைமுறையில் உள்ளது. இதுவரை 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் இருந்துள்ளனர். அ.தி.மு.க ஆட்சியில் கடைசி இரண்டு ஆண்டுகளாக சிஇஓ பதவி நிரப்பப்படாமல் இருந்தது. அதை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நிரப்பியது.

கோவை ஜி ஸ்கொயர்
இதேபோல் அண்ணாமலை புகார் எழுப்பியுள்ள கோவை விவகாரத்தில், சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019ல் விண்ணப்பித்துள்ளார். 28.01.2021ஆம் ஆண்டு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான அனுமதி கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவமாணிக்கத்திடம் ஜி ஸ்கொயர் வாங்கியிருக்கலாம்.ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

அண்ணாமலைக்கு அனுமதி வேண்டுமா
விதிமுறைகள் பின்பற்றி அனுமதி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். சிஎம்டிஏவில் அண்ணாமலையையே அமர வைத்தாலும் எட்டு நாளில் அனுமதி கிடைக்காது. அண்ணாமலை ஏதாவது லேஅவுட் போட்டிருக்கிறாரா? அண்ணாமலைக்கு ஏதேனும் அனுமதி தேவைப்படுகிறது என்றால் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும்.

வழக்கு தொடரப்படும்
ஜி ஸ்கொயர் தவிர மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. அண்ணாமலை சரியான ஆதரங்களோடு பேசினால் நல்லது. சரியான விவரங்களை திருத்திக்கொள்ளத் தயார். ஆனால், உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications