என்பிஆரில் புதிய 3 விதிகளை கடைபிடிக்க மாட்டோம்.. போராட்டத்தை கைவிடுங்கள்.. முதல்வர் அதிரடி!
என்பிஆரில் புதிதாக கொண்டு வந்துள்ள 3 விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை, அதனால் சிறுபான்மையினர் அனைவரும் சில குழப்பவாதிகளை நம்ப வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: என்பிஆரில் புதிதாக கொண்டு வந்துள்ள 3 விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை, அதனால் சிறுபான்மையினர் அனைவரும் சில குழப்பவாதிகளை நம்ப வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 22 ஏக்கரில் விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்பட உள்ளது. மொத்தம் தமிழகத்தில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க 11 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒவ்வொரு மாவட்டங்களாக நடந்து வருகிறது. விருதுநகரில் இன்று நடந்த விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்

என்ன சொன்னார்
விருதுநகரில் முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், சிறுபான்மையினர் யாரும் தமிழகத்தில் அச்சப்பட கூடாது.சிறுபான்மையினரை சிலர் தூண்டிவிட்டு போராட்டம் செய்ய வைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். தவறானவர்கள் பேச்சை இஸ்லாமியர்கள் கேட்க கூடாது.

பெண்கள் போராட்டம்
இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பெண்கள் போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு திரும்ப வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.எல்லோருக்கும் பாதுகாப்பான அரசை நாங்கள் வழங்கி வருகிறோம். அதனால் யாரும் அச்சப்படாமல் வாழ வேண்டும்.

என்ன விதிகள்
என்பிஆரில் புதிதாக கொண்டு வந்துள்ள 3 விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் தமிழ்கத்தில் மக்கள் யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை.சிறுபான்மையினர் அனைவரும் சில குழப்பவாதிகளை நம்ப வேண்டாம்; நிம்மதியாக வாழுங்கள். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் கட்ட அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி.

வேர் என்ன
இதற்காக 4500 கோடி ரூபாயில் இருந்து 5000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். மொத்தம் 1650 மாணவர்கள் புதிதாக இதன் மூலம் மருத்துவம படிக்க முடியும். 2021-22 வரை 3250 புதிய இடங்கள் இதனால் ஒதுக்கப்படும். இதற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ராமநாதபுரம் கல்லூரிக்கு மட்டும் சுமார் 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications