இங்கெல்லாம் வெளுக்க போகுது கனமழை.. இந்த வார இறுதியில் செம்ம மழைக்கு வாய்ப்பு இருக்கு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இந்த மாத இறுதியில் பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த 11 மாதங்களில் இந்த மாதம் தான் கடும் குளிர் நிறைந்த மாதமாக இருந்தது. இந்த சூழலில் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் அவ்வப்போது கனமழை பெய்தது. இதன் காரணமாக தண்ணீர் பிரச்சனை என்பது தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நீங்கிவிட்டது.
இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு தமிழகத்தில் மழை பெய்வதற்கான நம்பிக்கையை மக்களிடம் அதிகப்படுத்தி உள்ளது.

பலத்த மழை
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த மாத இறதியில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள்
அதாவது வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி போன்ற காரணங்களால் நவம்பர் 28ம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பற்றாக்குறை
வியாழன் மற்றும் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னைக்கு வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இந்த மழை தமிழகத்திற்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

வார இறுதியில்
இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், கூறுகையில், மழை மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் இந்த வார இறுதியில் தீவிரமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications