தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும்.. சென்னையின் நிலை என்ன? வானிலை மையம் கணிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video
வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு நிலை நாளை தாழ்வு மண்டலமாக மாறும்.
அதன்பின் இந்த தாழ்வு மண்டலாமாக வேகமாக வலிமை பெற்று புயலாக மாறும். இது புயலாக மாறினால் அதற்கு கேட்டி (gati) புயல் என்று பெயர் வைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இன்று மழை
இந்தநிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும். சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

எங்கு மழை
கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூா், நாகப்பட்டினம், சேலம், காஞ்சிபுரம், வேலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இன்று மதியம் வரை இங்கு வெயில் அடிக்கும். அதை தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் மழை பெய்யாது.

சென்னை நிலை
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் இன்று பல இடங்களில் வெயில் கொளுத்தும். மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடுமையான வெயில் இருக்கும். 100 - 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருக்கிறது. சென்னையிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட வாய்ப்பு இருக்கிறது.

கடல் எப்படி
அதே சமயம் வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அங்கு உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். அரபிக்கடலில் மட்டும் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications