சென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி!
தமிழகம் முழுக்க பரவலாக காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
சென்னை: தமிழகம் முழுக்க பரவலாக காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. சென்னை முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் ஆங்காங்கே தினமும் மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தமிழகம் முழுக்கவே பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

சென்னை மழை
சென்னையில் அதிகாலை 3 மணியில் இருந்து மழை பெய்து வருகிறது. சென்னை முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எங்கெல்லாம் மழை
நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது

பள்ளிகள் எப்படி
ஆனால் சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று மாலைக்கு மழை இன்னும் வேகம் எடுக்கும்.

டெல்டா
அதேபோல் திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications