அதிகாலையே சென்னையை புரட்டி எடுத்த மழை.. பல ஏரியாக்களில் பரவலாக மழை.. நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்று உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது.

தாழ்வு மண்டலம்

தாழ்வு மண்டலம்

இதன் காரணமாக ஏற்கனவே தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இது வரும் 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24ம் தேதி புயலாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு 25 ஆம் தேதிவாக்கில் இது நகர தொடங்கும்.

புயல்

புயல்

புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த புயல் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும். இந்த நிலையில்தான் சென்னையில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் 2-3 மணி நேரம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மழை

மழை

முக்கியமாக நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது.

 வேறு எங்கு

வேறு எங்கு

அதேபோல் எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. மழை காரணமாக சில இடங்களில் அதிகாலையில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக பெரிதாக சாலைகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட வெள்ள நீர் வெளியேற்றும் கால்வாய்கள் காரணமாக தண்ணீர் தேங்குவது பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+