விடாது கருப்பு.. தமிழ்நாட்டில் இன்றும் புதிய உச்சம் தொடப்போகும் வெயில்.. வெப்பநிலை தாறுமாறாக போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் 34- 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சராசரியாக தமிழ்நாடு முழுக்க நிலவும் வாய்ப்புகள் உள்ளன.

Weather Tamil Nadu may see hot weather today also says IMD department

கடந்த ஒன்றரை வாரமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக்க தொடங்கி உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது. ஆனால் இதெல்லாம் வெறும் டீசர்தான். மார்ச் மாத இறுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

தமிழ்நாடு உயரும்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருடத்தில் நேற்று அதிக வெப்பமான நாட்களில் ஒன்றாகும். நேற்று 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை கடந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்றை விட இன்று வெப்பம் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கம் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. இன்றும் அதைவிட அதிக வெப்பநிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் 40 C ஐ தொட கூட வாய்ப்பு உள்ளது. உண்மையான கத்ரி வெயில் இன்னும் தொடங்கவில்லை.

ஆனால் இன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வெப்பம் - வானிலை: தமிழ்நாட்டில் மழை, பனி காலம் நிறைவு பெற்று கோடைகாலம் தொடங்க வேண்டியதற்கான காலம் நெருங்கிவிட்டது. இதனால் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் முதல் கட்டமாக வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+