சென்னையில் இன்று இரவு மழை வெளுக்க போகுதாம்.. ரெடியா? வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்பவதுகுறித்து முறையான திட்டமிடலை செய்து கொள்ளுங்கள் ஏனெனில் தற்போது கனமழை பெய்ய நல்ல வாய்ப்பு இருப்பதாக சென்னை ரெய்ன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

weather update for chennai: good chance of moderate to heavy spells of Rains over many places in chennai

இந்த சூழலில் சென்னையில் இன்று பிற்பகலே பல இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. இந்த சூழலில் கருமேகங்கள் சூழ்ந்து வருவதால் சென்னையில் தற்போது எப்போது வேண்டும் என்றாலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை ரெய்ன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பக்கத்தில் சென்னையில் அலுவலகம் சென்றுள்ளவர்கள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மொத்தமாக வீடு திரும்புவார்கள். இந்த சூழலில் மேகங்கள் சூழ்ந்து வருகிறது. எனவே சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை அல்லது கனமழை எப்போது வேண்டுமானாலும் பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் பயணத்தை சரியாக திட்டமிடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து பார்க்கவே ரம்மியமாக உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் மழை வெளுக்கும் நிலை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+