2 புயல்.. 2 கடலில் மாற்றம்.. ஜுன் 6 டூ 9ம் தேதி ரொம்ப முக்கியம்.. தென்மேற்கு பருவமழை ஆட்டம் ஆரம்பம்
சென்னை: அரபிக் கடலிலும் வங்கக் கடலிலும் 2 காற்றழுத்தங்கள் உருவாகி உள்ள நிலையில், வரும் ஜுன் 6ம் தேதியில் 9 ம் தேதிக்குள் புயலாக மாறும் என்று ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.. இதையடுத்து, எந்த திசையில் புயல் வீசக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
தென்மேற்கு பருவ மழை விரைவில் துவங்க போகிறது.. இந்த மழையை நம்பிதான் பெரும்பாலான விவசாயிகள் காத்திருக்கிறார்கள்..

தாமதம்: வழக்கமாக ஜுன் 1ம் தேதியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த வருடம் தாமதமாக துவங்குகிறது. எப்படியும் செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஐரோப்பிய வானிலை மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.. இந்த ஜுன் முதல் வாரத்தில், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் 2 புயல் சின்னங்கள் உருவாக போவதாக கிலியை கிளப்பிவிட்டுள்ளது.
புதுஅறிவிப்பு: இதுகுறித்து ஐரோப்பிய வானிலை மையமான வெதர் ஃபேர்கேஸ்டர் தளம் (ECMWF) வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த இரண்டு சுழல்களும் நம்பமுடியாத அளவிற்கு செல்வதுடன், அரபிக்கடலில் உள்ளதை விட வங்காள விரிகுடாவில் உள்ளது வலிமையானதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், அரேபிக் கடலில் இருப்பது பெரிதாகவும், வங்காள விரிகுடாவில் இருப்பது மைனராகவும் மாறக்கூடும் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதேபோல இன்னொரு ட்வீட்டில், ஜுன் 6 முதல் 9 ம் தேதிக்குள் அரபிக் கடலில் மிகவும் சக்தி வாய்ந்த புயல் உருவாகும் என்று குளோபல் ஃபோர்காஸ்ட் சிஸ்டம் என்ற ஜிஎப்எஸ் (GFS) தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புயல் எந்த திசையில் செல்லும் என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றும், அநேகமாக ஆனால் இந்தியாவின் மேற்கு கடலோர பகுதி + ஓமன் + பாகிஸ்தான் போன்ற பகுதிகளை இலக்காக வைத்து வீசும் என்றும் கணித்துள்ளது.

மஞ்சள் அலர்ட்: ஏற்கனவே, கேரளாவிலும் கர்நாடகாவிலும் மழை பெய்து வருகிறது.. அதிலும் கேரளாவில் 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது... இப்படிப்பட்ட சூழலில், ஜூன் மாதத்தில் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் பலத்த மழை பெய்யும் என்று ஐரோப்பிய வானிலை மையமும் தெரிவித்துள்ளது..
இப்போதைய நிலவரப்படி அரபிக் கடலில் நிச்சயம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த காற்றழுத்தம் புயலாக தீவிரமடையும் பட்சத்தில் மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications