கி.வீரமணி மகனுக்கு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்தது.. துரைமுருகனுக்காக பொங்கிய குரல்
சென்னை: கி.வீரமணி அவர்களது மகனுக்கு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது..இப்போது எதன் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் பொறுப்பில் இருக்கிறார்.. அடுத்த கட்சியின் பொதுசெயலாளர் குடும்பம் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று போதிக்கும் முன்பு தன் குடும்ப கதையை யோசிக்க வேண்டாமா? ஒரு காதல் திருமணத்தைக் கூட ஏற்க மனமில்லாத கட்டுப்பெட்டித்தனம்தான் பெரியாரியமா? இதை பொது வெளியில் விவாதமாக்குவாரா வீரமணி? என்று சுந்தரராஜ சோழன் என்பவர் துரைமுருகனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட்டிருந்த சமூக வலைதளப்பதிவில், "தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா? இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!" என்று வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சுந்தரராஜ சோழன் என்பவர் கி.வீரமணி அவர்களது மகனுக்கு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது..இப்போது எதன் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் பொறுப்பில் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அடுத்த கட்சியின் பொதுசெயலாளர் குடும்பம் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று போதிக்கும் முன்பு தன் குடும்ப கதையை யோசிக்க வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் அவர் வீடியோவில் வீரமணி மகனுக்கு நடந்த திருமணம் குறித்து விமர்சிப்பதாக இருந்தது. அந்த வீடியோவில் "திகவில் மிகப்பெரிய பொறுப்பு, பொதுச்செயலாளர் பொறுப்பு, ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு சேர்மன் பொறுப்பு தான் திராவிடர் கழக தலைவர் பொறுப்பு. வீரமணி பையன் அன்புராஜூக்கு புதுச்சேரியில் 1982ல் திருமணம் நடந்தது. வினைதீர்த்த விநாயகர் கோவிலில் காதல் திருமணம் நடந்தது" என்று கூறப்பட்டிருந்தது.
கி.வீரமணி அவர்களது மகனுக்கு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது..இப்போது எதன் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் பொறுப்பில் இருக்கிறார்..அடுத்த கட்சியின் பொதுசெயலாளர் குடும்பம் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று போதிக்கும் முன்பு தன் குடும்ப கதையை யோசிக்க வேண்டாமா? ஒரு காதல் திருமணத்தைக் கூட ஏற்க மனமில்லாத கட்டுப்பெட்டித்தனம்தான் பெரியாரியமா? இதை பொது வெளியில் விவாதமாக்குவாரா வீரமணி?
— SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀ (@sundarrajachola) November 3, 2026
அதேபோல் சுந்தரராஜ சோழன் வெளியிட்ட இன்னொரு பதிவில், "திமுக பொது செயலாளர் துரைமுருகனின் குடும்ப நிகழ்வில் மந்திரங்கள் முழங்கியது குறித்து கடும் விவாதம் கிளம்பியுள்ளது.. இவற்றினால், திமுகவிலோ அல்லது மக்களிடமோ எந்த அசைவும் இல்லை. ஆனால், சுப.வீ தொடங்கி பெரியாரியர்களின் ஓலம் ஒலித்தபடியே உள்ளது.
திமுகவை பொறுத்தவரை அது எல்லா சமரசங்களையும் செய்த கட்சி, அப்படியில்லை என்றால் கூட அதற்கு சரியான தருணம் பார்த்து நிற்கும் கட்சி..திமுகவின் உள்முக மாற்றத்தை இடதுசாரி பத்திரிக்கையாளர்களும், திராவிட ஆதரவு ஊடகங்களும் இன்று வெள்ளையடிக்க முயல்கின்றன..
ஈவேரா பேசியதற்கு நேர் எதிரான தமிழர் இனமானம், தனித்தமிழ், மூவேந்தராட்சி, கற்புக்கரசி கண்ணகி, தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் என திமுக செயல்பட்டது..
திமுக பண்ணையார்த்தனங்களை ரசித்த, அதனை அடையத்துடித்த அல்லது மீட்க துடித்தவர்களின் மூளையில் உதித்த கட்சி. இதனை மறைக்க எத்தனை போலி வேடங்களை அவர்கள் போட்டுக் கொண்டாலும் அதன் அடியாழ உண்மை அதுவே.
திமுகவின் அமைப்பென்பதே குறுநில மன்னர்களை உருவாக்கி, சக்கரவர்த்திகளை வாரிசு அடிப்படையில் தலைமை பீடத்தில் அமர்த்தும் இலட்சியத்தை கொண்டுள்ளதை மிக எளிமையாக புரிந்துகொள்ள முடியும்" என்றும் கூறியுள்ளார்.திராவிட இயக்கங்களில் எந்த மதத்தவர்களும் அவரவர் முறைப்படி பிறப்பு இறப்பு சடங்குகளை செய்யக் கூடாது என்று அறிக்கை கொடுக்க திராணியுள்ளதா..அது முடியாதென்றால் எதற்கு இந்த வெற்றுப்புலம்பல்.. துரைமுருகனை கட்டம் கட்டி பொதுசெயலாளர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு பெற்றுத் தர லாபி நடக்கிறதா? என்றும் சுந்தரராஜ சோழன் என்ற நெட்டிசன் கேள்வி எழுப்பி உள்ளார்.




Click it and Unblock the Notifications
