துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு 7 நாட்களில் வரும் குட் நியூஸ்.. இந்த வார பலன்கள் முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

Rasi Palan This Week: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-thulam-viruchigam-dhanusu-rasi-people-may-get-good-benefits-this-week

அதன்படி, நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கக்கூடிய நல்ல பலன்கள், தொழில் வளர்ச்சி, பணவரவு, குடும்ப வாழ்க்கை, அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசியினருக்கு நரம்பு, கண், சளி தொந்தரவுகளில் மிகுந்த கவனம் தேவை. மனதிற்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கடந்த காலங்களில் நடந்த விஷயங்களை எல்லாம் யோசித்து குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் உங்களாலேயே சிறு சிறு தடைகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் வயிறு, முதுகு, கால், மனக் குழப்பம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சுப விரய பாக்கியம் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்தாலும் அவை சந்தோஷ செலவுகளாக இருக்கும். எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக காணப்பட்டு வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும்.

உணவுக் குழாய், செரிமானப் பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது, நீராகாரங்களை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சுப விரயங்கள் ஏற்படும். குடும்பம் தொடர்பான விஷயத்தில் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

தொழில், உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சளி தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+