ஏமாற்றத்துடன் காத்திருந்த ரசிகை! தேடி அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய்! ஆனந்த கண்ணீரில் பூஜா

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை சேர்ந்த தனது ரசிகை பூஜா ஸ்ரீ-யை அழைத்த முதல்வர் விஜய், அவரது 3 மாத குழந்தைக்கு "விஜய்" என்ற தனது பெயரை சூட்டினார். முன்னதாக கைக்குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்து விஜய்யை பார்க்க முடியாததாலும் குழந்தைக்கு பெயர் வைக்க முடியாததாலும் கலங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் விஜய் கோவையிலிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறை சென்றார்.

CM Vijay

விஜயமங்கலம் டோல்கேட் அருகே மூன்று மாத கை குழந்தை உடன் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த பூஜா ஸ்ரீ, விஜய்க்காக காத்திருந்தார். தனது குழந்தைக்கு 3 மாதமாகியும் விஜய்தான் பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தார்.

ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பெண், குழந்தையுடன் உள்ளே செல்ல முடியவில்லை. போலீஸாரும் நெரிசலை காரணம் காட்டி அனுமதிக்கவில்லை. இதனால் பூஜாஸ்ரீ ஏமாற்றத்துடன் காத்திருந்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு சிறு வயது முதலே விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு திருமணமானதும் விஜய் அண்ணாதான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தேன்.

CM Vijay

எனக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. அவரது பெயரைத்தான் வைக்க வேண்டும் என்றிருந்தேன். கடந்த முறை தாராபுரத்திற்கு வந்த போது அவரை எளிதாக பார்க்க முடிந்தது.

ஆனால் விஜயமங்கலத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், முதல்வர் விஜய் வேனில் இருந்து வெளியே வராமல் காரில் அமர்ந்தபடியே கையசைத்து சென்றது ஏமாற்றத்தை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வு முடிந்த பிறகும் விஜய்யை பார்க்க அந்த பெண் காத்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த விஜய், அந்த பெண்ணை ஈரோட்டிற்கு அழைத்து சந்தித்தார். அவரது குழந்தையை தூக்கி அதற்கு, "விஜய்" என பெயரிட்டார். இதை கண்ட பூஜா ஸ்ரீ ஆனந்த கண்ணீர் வடித்தார். பிறகு அந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தையும் போட்டுவிட்டார். பிறகு பூஜை ஸ்ரீயை கட்டி அணைத்த விஜய் ஆறுதல் சொன்னார். இதனால் பூஜா மகிழ்ச்சி அடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+