பரனூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிகளில் இனி இவர்களுக்கு கட்டணமில்லை.. மத்திய அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், பாஸ்டேக் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சுங்கச்சாவடிகளை படிப்படியாக நீக்கிவிட்டு, அதற்கு பதில் மத்திய அரசு அதிநவீன தானியங்கி சுங்கக் கட்டண முறையை கொண்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், பரனூர் உள்பட ஆறு இடங்களில் முதற்கட்டமாக அதிநவீன சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டண விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபற்றி சற்று விரிவாக நாம் பார்ப்போம்.

நாடு முழுவதும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 195 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 1,228 சுங்கச்சாவடிகள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் அதிக நேரம் காத்திருப்பதற்கு தடுக்க பாஸ்டேக் முறை செயல்பாட்டில் இருக்கிறது. ஆனாலும் அதிகப்படியான வாகனங்கள் வருவதால் சிக்கலான நிலை பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஏற்படுகிறது. கடுமையான நெரிசல் ஏற்படும் போது, சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு தந்து அனைவரையும் இலவசமாக பயணிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Exemption from toll charges for the cars of army man at state-of-the-art toll plazas like Paranur

இந்த சூழலில் சுங்ககட்டண இழப்பு ஏற்படுவதை தடுக்க, சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, 'மல்டிலேன ஃபிரீ புளோ டெக்னாலஜி' என்ற அதிநவீன தானியங்கி சுங்கக்கட்டண முறையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் பரனூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட நாடு முழுவதும் 6 சுங்கச்சாவடிகளில் இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது.

குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் 6 வழிச்சாலைகளின் மேலே உள்ள இரும்புத்தடுப்புகளில் அதிநவீன வாகன பதிவெண்ணை கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ரேடார் கருவிகள், வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது 'பாஸ்டேக்' கணக்கில் இருந்து தானாகவே கட்டணத்தை கழித்துவிடும்.

பாஸ்டேக்கில் பணம் இல்லாமலோ, பாஸ்டேக் ஒட்டப்படாமலோ வாகனம் கடந்துசென்றால், அதன் பதிவு எண் கண்டறியப்பட்டு, உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை சென்றுவிடும். 2028-ம் நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிநவீன தானியங்கி சுங்கக் கட்டண வசதியை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்தநிலையில், இதுவரை சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டைகளை காண்பித்து கட்டண விலக்கு பெற்று வந்த ராணுவத்தினருக்கு புதிய தொழில்நுட்பத்தால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.. விலக்கு அளிக்கப்பட்டாததால், ராணுவ வீரர்களின் சொந்த கார்களுக்கும் கட்டணம் செலுத்துமாறு அபராத நோட்டீசுகள் அனுப்பப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியது. இதன்படி, ராணுவ வீரர்களின் சொந்த கார்களில் பாஸ்டேக் பொருத்தி, அதற்கான வருடாந்திர கட்டணத்தை பாதுகாப்பு அமைச்சகம் திருப்பி செலுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருகிறது.

எனினும், இதற்கான செலவை எந்த அமைச்சகம் ஏற்கும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள. இதனால் சொந்தமாக கார்கள் வைத்திருக்கும் சுமார் 14 லட்சம் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+