Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் விமானங்களை பந்தாடி தாயகம் காத்த அபிநந்தன்.. திரும்பி வா, சிங்கமே!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா திரும்புகிறார் அபிநந்தன்- வீடியோ

    சென்னை: ஒரு சிறந்த போர் விமானத்தின் பைலட்டாக செயல்பட, என்ன தகுதி தேவைப்படும்? என்பதற்கு விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் ஒரு சிறந்த உதாரணம்.

    இந்தியாவின் ராணுவ நிலைகள் பாகிஸ்தானால் தகர்க்கப்படுவதை தடுக்க, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை துரத்திச் செல்லும் ரிஸ்க்கை அவர் துணிந்து எடுத்தார்.

    நாள்: புதன்கிழமை. நேரம்: காலை 9.45 மணி. எல்லை முழு அளவில் தயார் நிலையில் இருந்தது. அப்போது சில விமானங்கள் நமது எல்லைக்குள் ஊடுருவுவதை ரேடார்கள் எச்சரித்தன. சரியாக காலை 10 மணிக்கு, பாகிஸ்தானின் 3 எப்- 16 போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. நவ்ஷெரா செக்டார் பகுதிக்குள் நுழைந்த, அந்த விமானங்கள், குண்டுகளை வீசத் தொடங்கின.

    Welcome back home Singam Wing Commander Abhinandan

    உடனடியாக இந்திய விமானப்படை தனது அதிரடியை ஆரம்பித்தது. மிக் 21 வகை விமானங்கள் பதிலடிக்கு பறந்தன. "நாங்கள் எல்லோரும் ரெடி சார்" என்று பதில் வந்தது விங் கமாண்டர் அபிந்தனிடமிருந்து. உடனே புயலென தனது மிக் 21 பைசன்ஸ் போர் விமானத்தில் பறக்க ஆரம்பித்தார். அதி நவீன எப்-16 வகை விமானத்தை எதிர்த்து தாக்குதல் நடத்துவது என்பது, பழமையான மற்றும் வசதி குறைந்த மிக் பைசன் வகை விமானத்திற்கு எளிதான விஷயம் இல்லை என்பதை அறிந்திருந்தும் புயலென சீறினார் அபிநந்தன்.

    இந்திய பிரிகேட் தலைமையகம் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே பாகிஸ்தானின் இலக்காக இருந்தது. ஸ்ரீநகர் தளத்தில் இருந்து 2 மிக் 21 வகை விமானங்கள் அனுப்பப்பட்டன. சுகோய் 30 எம்கேஐ போர் விமானமும் களமிறக்கப்பட்டது. அபிநந்தன் செலுத்திய மிக் 21 விமானம் சரியான நேரத்திற்கு எப் 16 விமானத்தை இடைமறித்தது.

    எப் 16 வகை போர் விமானத்தில், வானிலேயே ஏவும் வசதி கொண்ட ஏவுகணை உண்டு. அது மட்டுமா, எப்-16 விமானத்திற்கு துணையாக மிராஜ்-3 வகையை சேர்ந்த 4 விமானங்கள், மற்றும் சீனாவில் தயாரான, ஜேஎப்-17 தண்டர் வகை, போர் விமானங்கள் நான்கும் வந்திருந்தன. இந்த விமானங்களை எதிர்ப்பது மிகவும் அபாயகரமானது என்பது அபிநந்தனுக்கும் தெரியும். இருந்தாலும் தேசம் காக்க எந்த தியாகத்தையும் செய்ய அபிநந்தன் தயாராக இருந்தார். இந்திய விமானப் படையிடமிருந்து, பாகிஸ்தான் களமிறக்கியுள்ள அதி நவீன போர் விமானங்கள் குறித்த எச்சரிக்கை அபிநந்தனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அபிநந்தன் இலக்கு ஒன்றே ஒன்றுதான். எப் 16 போர் விமானத்தை மேற்கொண்டு இந்திய எல்லைக்குள் வர விடக்கூடாது என்பதுதான் அது.

    Welcome back home Singam Wing Commander Abhinandan

    உடனிடயாக எப்-16 விமானத்தை நோக்கி, ஆர்-73 வகை விண்வெளி ஏவுகணையை செலுத்தினார் அபிநந்தன். அடிபட்டது பாகிஸ்தான் விமானம். நொறுங்கி விழ ஆரம்பித்தது. இந்த அதிரடியின்போது, அபிநந்தன் விமானத்தை, பாகிஸ்தான் விமானப்படை ஏவுகணை தாக்கியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட அபிநந்தன், பாரசூட்டில் கீழே குதித்தார். அவர் தரையிறங்கிய பகுதி பாகிஸ்தான் பகுதி என்பதால், அந்த நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.

    இந்திய ராணுவ நிலைகளை தகர்ப்பதுதான் பாகிஸ்தானின் நோக்கம். ஆனால் விங் கமாண்டர் அபிநந்தனின் தீரமான செயல்பாட்டால், பாகிஸ்தான் தனது இலக்குகளில் ஒன்றைக் கூட தாக்க முடியவில்லை. விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி கீழே குதித்து காயமடைந்த பிறகும், எதிரிகளிடம் பிடிபடாமல் இருக்க, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். முக்கியமான ஆவணங்கள், எதிரிகளுக்கு கிடைக்காமல் இருக்க தனது, வாயில் போட்டு விழுங்கிவிட்டார். சில ஆவணங்களை கிழித்து, அங்கேயிருந்த நீர் குட்டைக்குள் வீசிவிட்டார்.

    இந்திய விமானப்படையில், 16 வருடங்கள் அனுபவம் கொண்ட, அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். முன்னாள் போர் விமானி, ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமான் இவரது தந்தை. புலிக்கு பிறந்தது புலியாகத்தானே இருக்க முடியும். 2000மாவது ஆண்டில், தேசிய பாதுகாப்பு அகாடமியில் அபிநந்தன் இணைந்தார். 2004ம் ஆண்டு, போர் விமானியானார். முதலில் எஸ்யூ30எம்கேஐ வகை விமானத்தின் பைலட்டாக இருந்த அபிநந்தன், பின்னர் மிக் 21 வகை விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளார்.

    Welcome back home Singam Wing Commander Abhinandan

    1973ம் ஆண்டில் போர் விமான பைலட்டாக பொறுப்பேற்ற தனது தந்தைதான், அபிநந்தனின், ஆதர்ஷ நாயகன். சுமார் 4000 மணி நேரங்கள் போர் விமானத்தை இயக்கி சாதித்தவர். அபிநந்தனின் தந்தை, 2001ம் ஆண்டு மேற்கு செக்டார் பகுதியில் நடத்தப்பட்ட ஆபரேஷன் பராக்ரமாவில் முக்கிய பங்காற்றியவர். நாடாளுமன்ற தாக்குதலையடுத்து இந்திய விமானப்படை நடத்திய அதிரடி அதுவாகும்.

    அபிநந்தனின் தாய், மருத்துவராகும். உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சென்று மருத்துவ உதவி செய்தவர். அபிநந்தன் மனைவி தன்வி மார்வா விமானப்படையில் ஸ்கோர்டன் லீடர் பதவியில் இருந்தவர். பல வீர தீர விருதுகளையும் பெற்றுள்ளார். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோவை, அமராவதிநகர் பகுதியிலுள்ள ராணுவ நலப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த அபிநந்தன், கடக்வாசலா, தேசிய பாதுகாப்பு அகாடமியில் உயர் கல்வியை முடித்தவராகும்.

    2011ம் ஆண்டு, தொலைக்காட்சி டாக்குமென்ட்ரி ஒன்றில் அபிநந்தன் பேட்டி இடம் பெற்றது. அதில், எஸ்யூ30 பைலட்டாக உங்களை எது தூண்டியது என்ற கேள்விக்கு சிரித்தபடியே, அபிநந்தன் அளித்த பதில், "பயிற்சி காலம், நமது மோசமான செயல்பாட்டை நீக்கிவிட்டு சிறந்தவர்களாக மாற்றுகிறது" என்று கூறினார். அபிநந்தனுடன் பணியாற்றுவோர் அவரை, சிங்கம் என்றுதான் அழைப்பது வழக்கம். சிங்கம் நாளை தனது குகைக்கு திரும்ப உள்ளது.

    வருக, வருக விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான். நீங்கள் உண்மையிலேயே இந்தியாவின் ஹீரோ!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+