Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெல்கம் நண்பா".. சந்திரயான் 2 உடன் திடீரென கனெக்சனை உருவாக்கிய சந்திரயான் 3.. நிலவில் சுவாரசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சந்திரயான் 2' ஆர்பிட்டர் மற்றும் 'சந்திரயான் 3' லேண்டர் இடையே தகவல் தொடர்பு இணைப்பு வெற்றி பெற்றுவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

 Welcome Buddy: Chandrayaan 2 Orbiter welcomes Chandrayaan 3 lander Vikram in moon

3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது. அதன்பின் இதை நாசா கண்டுபிடித்தது. நாசாவின் LROC (Lunar Reconnaissance Orbiter) விண்கல ஆய்வு கருவி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டர் இறங்காத காரணத்தால் உள்ளே இருக்கும் ரோவரும் வெடித்து சிதறியது. ஆனாலும் இந்த திட்டம் முழு தோல்வி கிடையாது. காரணம் ஆர்பிட்டர் வெற்றிகரமாக அடுத்த ஒன்றரை வருடம் நிலவை சுற்றியது.

சந்திரயான் 3 திட்டம்: இந்த திட்டம் இதன் மூலம் பாதி தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த திட்டம் தோல்வி காரணமாக நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் சோதனையை நிறைவு செய்வதற்காக சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட் மூலம் இதை கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

இதையடுத்து மிக நீண்ட பயணத்தை முடித்து தற்போது நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்து தற்போது விக்ரம் லேண்டர் கொஞ்சம் கொஞ்சமாக நிலவில் தரையிறங்கி வருகிறது. நாளை மறுநாள் மாலை 6.04 மணி அளவில் கடைசி கட்டமாக விக்ரம் லேண்டர் நிலவில் களமிறங்கும்.

லேண்டர்: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கி உள்ளது. தற்போது சந்திரயான் 3 திட்டத்தில் சந்திரயான் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு சென்றது.

இது சந்திரயான் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பின் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திரயான் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படுத்தப்பட்டது சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திரயான் 3வை கொண்டு செல்ல உதவியது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான்.

 Welcome Buddy: Chandrayaan 2 Orbiter welcomes Chandrayaan 3 lander Vikram in moon

இது ஒரு பாக்ஸ் போல கீழே ராக்கெட் போன்ற திரஸ்டர்கள் கொண்ட அமைப்பு ஆகும். இதில் திரஸ்டர்களுக்கு சார்ஜ் கொடுப்பதற்காக சோலார் பேனல் இருக்கும். இதில்தான் லேண்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் உள்ளே ரோவர் இருக்கும். இதில் லேண்டர், ரோவர் தவிர்த்து ஷேப் - Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) எனப்படும் அமைப்பும் உள்ளது. இது பூமியின் அளவை குறித்த ஆய்வை நிலவின் வட்டப்பாதையில் இருந்து மேற்கொள்ளும்.

இணைப்பு ஏற்படுத்தப்பட்டது: சந்திரயான் 3 திட்டத்தில் சந்திரயான் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இந்த நிலையில்தான் 'சந்திரயான் 2' ஆர்பிட்டர் மற்றும் 'சந்திரயான் 3' லேண்டர் இடையே தகவல் தொடர்பு இணைப்பு வெற்றி பெற்றுவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நிலவில் சுற்றிகொண்டு இருக்கும் ஆர்பிட்டர் உடன் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது முக்கியமான தகவலை பூமிக்கு அனுப்பவும், தொலைத்தொடர்பு ரீதியாக விக்ரம் லேண்டருக்கு உதவவும் இந்த ஆர்பிட்டர் உதவியாக இருக்கும்.

இணைப்பு மெசேஜ்: "'Welcome, buddy!' என்ற மெசேஜ் மூலம் சந்திரயான் 2வின் ஆர்பிட்டர் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் உடன் இணைப்பை ஏற்படுத்தியது. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதற்கு இது மேலும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+