கனடாவில் நல்ல சம்பளம்.. செட்டிலான இந்திய பெண்.. பெற்றோருக்காக வேலையை உதறி உருக்கமான வீடியோ

Subscribe to Oneindia Tamil

டொராண்டோ: கனடாவில் ஆறு ஆண்டுகள் வசித்து, 'டெலாய்ட்' நிறுவனத்தில் நல்ல ஊதியம் தரும் வேலையில் இருந்த ப்ரீத்தி பிஸ்னிக், இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார். தொழில் அல்லது நிதி சார்ந்த காரணங்களுக்காக நாடு திரும்பும் பலரைப் போலல்லாமல், வயது முதிர்ந்த பெற்றோருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பமும், வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்து நிதானமாக வாழ வேண்டும் என்ற எண்ணமுமே இவரது முடிவுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

இன்று இன்ஸ்டாகிராமில் ப்ரீத்தி வெளியிட்ட வீடியோவில், நான் என்னுடைய கனடா வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பத் திட்டமிட்டுள்ளேன் பெற்றோருடன் நேரத்தைச் செலவிட வேண்டு்், தனது உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் , தற்போதைக்கு வேலையிலிருந்து ஓய்வு எடுப்பது ஆகியவை தான் எனது நோக்கம்.

Well-paid job in Canada Indian woman settled abroad Quits job for her parents

கனடா நிறுவனம் என்னை வேலையில் இருந்து நீக்கவில்லை.. நிறுவனத்திற்குத் திரும்பும் முன் சிறிது காலம் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று என் மேனேஜர் அன்புடன் கூறினார். ஆனால் நானாகவே முன்வந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். கனடாவை விட்டு வெளியேறுவது வேலை தொடர்பான கட்டாயத்தினால் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. கனடியக் குடிமகளாக இருப்பதால், வேலை இல்லாவிட்டாலும் அவரால் அங்கு தொடர்ந்து என்னால வசிக்க முடியும். இது முற்றிலும் எனது தனிப்பட்ட முடிவு .

இதற்கு மிக முக்கியமான காரணம் எனது பெற்றோர்தான். எனது பெற்றோர் இருவரும் வயதாகிவிட்ட நிலையில் இருக்கிறார்கள். தாயாருக்குக் கண் பார்வை பிரச்சனை உள்ளது.அவர்கள் நடமாடுவதில் சிரமங்கள் இருக்கிறது கனடாவிலேயே தங்கிவிட்டு, பின்னர் அவர்களுடன் இருக்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதை விட, இந்தியா திரும்பி அவர்களுடன் நேரத்தைச் செலவிடவே நான் விரும்புகிறேன். கனடாவில் வசித்த காலத்தில் அவர் ஊட்டச்சத்து குறித்த படிப்பை முடித்தேன். அந்த அறிவைப் பயன்படுத்தித் தனது பெற்றோரின் ஊட்டச்சத்து, உடற்தகுதி மற்றும் உடல் வலிமை ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

தனது தொழில் மற்றும் வாழ்க்கை குறித்து அடுத்த ஆண்டு முடிவெடுக்கலாம் என்று உள்ளேன். தற்போதைக்குத் தனது பெற்றோரிடமும் தன்னிடமும் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். தனது சொந்த உடல்நலம் மற்றும் உடற்தகுதி சார்ந்த சவாலான பயணத்திற்குப் பிறகும் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் சென்றபோது தனது எடை சுமார் 78 கிலோவாக இருந்தது. அடுத்த ஆறு ஆண்டுகளில் அவரது எடை கிட்டத்தட்ட 100 கிலோவாக அதிகரித்திருக்கிகறது.

கடுமையான முயற்சியின் மூலம் அவர் சுமார் 10 கிலோ எடையைக் குறைத்துள்ளே்்; இப்போது, ​​நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கணினி மூலம் செய்யும் வேலையிலிருந்து நீண்ட கால ஓய்வு எடுத்துக்கொண்டு, உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்" இவ்வாறு ப்ரித்தி கூறினார்.

பெற்றோரை ஏன் கனடாவுக்கு அழைத்து வரவில்லை?

ப்ரீத்தியின் இந்த முடிவை பலரும் கேட்டுள்ளார்கள்; குறிப்பாக, ஏன் அவர் தனது பெற்றோரை கனடாவுக்கு அழைத்து வரக்கூடாது என்ற கேள்வி கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த பிரித்தி, எனது தாயாருக்குக் குளுக்கோமா பாதிப்பு இருக்கிறது. உடல்நலம் மற்றும் நடமாட்டம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக நீண்ட விமானப் பயணம் அவருக்குச் சிரமமாக இருக்கிறது. எனது தந்தையும் முதியவர் " என்றார். மற்றொரு பயனர், அவர் தனது பெற்றோரின் ஒரே குழந்தையா என்று கேட்டார். அதற்குப் பிரீத்தி, அமெரிக்காவிலும் லண்டனிலும் வசிக்கும் சகோதரர்கள் தனக்கு இருப்பதாக தெரிவித்தார்..

எனினும், பல நெட்டிசன்களின் கருத்துகள் பெரும்பாலும் ஆதரவாகவும் நேர்மறையாகவும் இருந்தன. ஒரு பயனர், "எந்தவொரு நாட்டையோ அல்லது வேலையையோ விடப் பெற்றோரே மிக முக்கியமானவர்கள்," என்று எழுதினார். மற்றொருவர், "உங்கள் முடிவுக்குக் காரணம் உங்கள் பெற்றோர்தான் என்றால், நீங்கள் ஏற்கனவே ஆசிர்வதிக்கப்பட்டவர்; அங்கு சென்றாலும் நிச்சயம் 200% வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தை விடப் பெரியோரின் ஆசிர்வாதம் எப்போதும் சிறப்பாகச் செயல்படும்... வாழ்த்துகள்," என்று கருத்து தெரிவித்தார்.

மூன்றாவது நபர், "மிகவும் அருமை! உங்களுக்கு என் வாழ்த்துகள்; உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் எல்லாம் நலமாக அமையட்டும்!!! இத்தகைய முடிவை எடுப்பதற்கு மிகுந்த மன உறுதி தேவை. இந்த மாற்றம் எவ்வித மன அழுத்தமும் இன்றி அமையவும், நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறவும் வாழ்த்துகிறேன்!!" என்று தெரிவித்தார்.

நான்காவது நெட்டிசன், "இதற்காக நீங்கள் என்றென்றும் உங்களையே பாராட்டிக்கொள்வீர்கள். என்னை நம்புங்கள், இது மிகச் சிறந்த முடிவாக இருக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நீங்கள் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புவதில் மிக்க மகிழ்ச்சி," என்று குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+