ஆரி நீ வேற மாரி.... புறக்கணித்தவர்களை புறந்தள்ளி ஜெயித்தது நீதானே #WeLoveAari

பிக்பாஸ் 4 பட்டத்தை ஆரி அர்ஜுனன் ஜெயித்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது திரைப்படங்களை பதிவிட்டு இணைய தளங்களில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரி ப்ரோ நீ வேற மாரி என்று கொண்டாடி தீர்க்கின்றனர் நெட்டிசன்கள். அன்பு கேங் என்ற பெயரில் மொத்தமாக சேர்ந்து கொண்டு ஆரியை மட்டம் தட்டினாலும் தனி ஒரு ஆளாக சமாளித்து பொறுமையாக விளையாடி பிக்பாஸ் 4 சீசன் பட்டத்தை தட்டிச் சென்றிருக்கிறார். 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் பல சிக்கல்களை சமாளித்து சவாலான போட்டியாளர்கள் என்றெல்லாம் பட்டம் கொடுக்கப்பட்டவர்களை சல்லி சல்லியாக நொறுக்கி கடைசியில் பிக்பாஸ் வெற்றியாளராக வாகை சூடியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே குரூப்பிசம் தனியாக தெரிந்தது. ரியோ கேங் தனியாக இருக்க, ஆரியை பலரும் அலட்சியப்படுத்தினார்கள். ஆரி என்ன சொன்னாலும் அதற்கு எதிர்பதமாக சிலர் செய்து வந்தனர். அப்படி குரூப் சேர்ந்து கொண்டு விளையாடிய பலரும் வீட்டை விட்டு வெளியேற தங்களுக்கு என தனி பாணியில் விளையாடியவர்கள் மட்டுமே வெற்றியின் வாசல்படி வரை வந்தனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் என்னதான் சண்டை நடந்தாலும் அத்தனை சண்டைகளையும் சமாளித்து வந்த ஆரி பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களுக்கு மட்டும் அண்ணன் இல்லை பார்வையாளர்கள் பலருக்கும் அண்ணனாகிப் போனார். ஆரி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே பலகோடி மக்கள் ஓட்டு போட்டிருக்கின்றனர். இறுதியில் வெற்றியாளராக ஆரி அறிவிக்கப்பட்ட உடன் அதை கொண்டாடி தீர்க்கின்றனர் நெட்டிசன்கள்.

ஒளிரும் நட்சத்திரம்

ஒளிரும் நட்சத்திரம்

சக போட்டியாளர் சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களுடைய வெற்றி உண்மையான வெற்றி என்று பதிவிட்டுள்ளார் ஆரி சகோதரா நீங்கள் அனைவரையும் வென்று விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நீங்களே வென்றீர்கள்

நீங்களே வென்றீர்கள்

முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள், பின்னர் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள், பின்னர் அவர்கள் உங்களுடன் சண்டையிடுவார்கள், பின்னர் நீங்கள் வெல்வீர்கள் என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

சோலோவா ஜெயித்தவர்

சோலோவா ஜெயித்தவர்

பலகோடி இதயங்களை வென்றவர் ஆரி. மனோதிடம்தான் இவருடைய மிகப்பெரிய வெற்றி. எல்லோரும் குரூப்பிசம் செய்த போது தனி ஒருவராக எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

அப்பா மகள்

அப்பா மகள்

விஜய் தனது மகனுடன் விளையாடிய போட்டோவை பதிவிட்டு அதனுடன் ஆரி தனது மகளை கொஞ்சும் படத்தையும் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். அப்பா மகன் அன்பு, அப்பா மகள் அன்பு இது சமீபத்தில் என் மனதிற்கு பிடித்த புகைப்படங்கள் என்று பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர்.

ஹவுட்மேட்ஸ் மனநிலை

ஹவுட்மேட்ஸ் மனநிலை

என்னதான் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை போட்டாலும் வெற்றியாளருக்கு கை தட்டி வாழ்த்துவதுதான் மரபு. ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அனிதா, சனம் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். பொறாமை பிடித்தவர்கள் என்று நெட்டிசன்கள் திட்டித்தீர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+