கோடை வெயிலை தணிக்க வரும் மழை.. மேற்கு தொடர்ச்சி மலை அருகிலுள்ள மாவட்டங்களில் மழை.. வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலும் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கோடை வெயிலைக் குளிர்விக்கும் விதமாகக் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்று கோவை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது.

இந்நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் புதுவை உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடலோர பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதிகபட்சமாகக் கரூரில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 29 டிகிரி செஸ்சியசாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications