WFH: காலத்தின் கட்டாயம்.. வீட்டில் இருந்து வேலை செய்ய முன்னுரிமை கொடுங்க! பிரதமர் மோடி யோசனை
செகந்திரபாத்: தேச நலன் கருதி நாட்டு மக்கள் பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும், Work From Home நடைமுறையை நம் தொடர்வது காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நாட்டு நலன் கருதி பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி முக்கியமான சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையிலும் மேற்காசிய போரால், கச்சா எண்ணெய் நெருக்கடி அதிகரிப்பு ஆகியவற்றை சமாளிக்க சிக்கனமான நடவடிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை மக்களுக்கு அளித்துள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை
குறிப்பாக கூடுமானவரை வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை பின்பற்றலாம் என்றும் மோடி அட்வைஸ் செய்துள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக கூறியதாவது:-
சாத்தியமான இடங்களில் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் காரணமாக பயணம் குறையும், எரிபொருள் பயன்பாடு குறையும் மற்றும் பொருளாதார அழுத்தமும் மக்களுக்கு குறையும்.
"கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற பல முறைகளை நாம் உருவாக்கினோம். அதற்கு மக்கள் பழகியும் விட்டனர். இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், அதுபோன்ற நடைமுறையை மீண்டும் தொடங்குவதுதான்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில்
இது தேசிய நலனுக்கானதாக இருக்கும். வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH), ஆன்லைன் கருத்தரங்குகள் மற்றும் விர்சுவல் கூட்டங்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பயணங்களை குறைக்கும் விதமாக ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு முறைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட இந்த முறைகள், தற்போதைய உலகளாவிய நெருக்கடியான சூழலிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன
டிஜிட்டல் தளங்கள் மூலம் உற்பத்தித்திறனை குறைக்காமல் பேணிக்காக்க முடியும். அதே நேரத்தில் எரிபொருள் தேவையையும் குறைக்க முடியும்.
சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள்
இறக்குமதியை குறைத்து அந்நியச் செலாவணியை சேமிக்க வேண்டும் உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியை சேமிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை சேமிப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.
சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் பயன்பாட்டை குறைப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். ஒவ்வொரு குடும்பமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தால், அது தேச நலனுக்காக ஆற்றும் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.















Click it and Unblock the Notifications