கேம் ஓவர்! எடப்பாடியிடம் பிரம்மாஸ்திரம்! ரெடியான 16 தீர்மானம்! ஓபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
சென்னை: அதிமுகவில் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
திமுக பொதுக்குழு கூடுவதற்கு இன்னும் சரியாக 1 வாரமே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்ட தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பொதுக்குழு கண்டிப்பாக நடக்காது என்ற நம்பிக்கையில் இருக்கிறது ஓ பன்னீர்செல்வம் தரப்பு.
இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.

ஏற்பாடுகள்
இந்த பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் வானகரத்தில் நடந்து வருகிறது. அங்கு இதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதிமுக தலைக்கழகம் சார்பாக ஏற்கனவே இதற்கான அழைப்பிதழும் சென்றுவிட்டது. வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்திற்கு வெளியே உள்ள திறந்தவெளி மைதானத்தில் கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான முக்கியமான சில தகவல்கள் கசிந்து உள்ளன.

16 தீர்மானங்கள்
அடுத்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட உள்ளன. இதில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் முதல் தீர்மானம், பொதுக்குழு, செயற்குழு, மற்ற தேர்தல்களில் வென்ற நிர்வாகிகளுக்கான ஒப்புதல் வழங்கும் தீர்மானம் ஆகும். அதாவது இந்த பதவிகளை வென்றவர்கள் கடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. அதற்கான ஒப்புதல் வழங்கப்படும். ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல்அளிக்கப்படாது .

2 முக்கிய தீர்மானம்
இது போக இன்னும் முக்கியமான 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அந்த 2 தீர்மானங்கள் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு எதிராக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று - எதிர்பார்த்தது போல பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் தீர்மானம் ஆகும். பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து, அவருக்கு அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் வழங்கும் தீர்மானம் ஆகும்.

ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல்
அடுத்த தீர்மானம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்குவது தொடர்பான தீர்மானம் ஆகிய இரண்டு தீர்மானங்கள் ஓ பன்னீர்செல்வதற்கு எதிராக திரும்பும் என்று கூறப்படுகிறது. இது போக இன்னும் சில பொது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் தீர்மானம், திமுகவிற்கு எதிராக தீர்மானம், சில தமிழ்நாடு நலன்கள் தொடர்பான தீர்மானங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன.

பொருளாளர்
இதில் பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள். எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனால், அவரே எளிதாக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்க முடியும். இதற்கு பொதுக்குழு அவசியம் இல்லை. அதனால் அது தொடர்பான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

வழக்கு
அதேபோல் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும்... அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல என்று இன்று கூறிய காரணத்தால், பொதுச்செயலாளர் தொடர்பான தனித்தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்கு ஓபிஎஸ் தடை வாங்காத பட்சத்தில் இந்த தீர்மானங்கள் தனி தீர்மானங்களாக கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications