"பிடிஆர்".. வெறும் 48 மணி நேரத்தில் 4 சம்பவங்கள்.. பாஜகவிற்கு அடுத்தடுத்து "தர்ம சங்கடம்".. போச்சே!
சென்னை: சனிக்கிழமை பிற்பகலில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக கட்சி 4 தர்மசங்கடங்களை எதிர்கொண்டு உள்ளது. அடுத்தடுத்து பாஜகவில் நடக்கும் சம்பவங்களால் அக்கட்சி விமர்சனங்களையும் சந்தித்து உள்ளது..
Recommended Video
மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இவரின் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவரின் வீட்டிற்கு சென்றார்..
அப்போது பாஜகவினர் இவரின் காரில் செருப்பு வீசி எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர் தற்போது கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.

தர்மசங்கடம் 1
இதனால் பாஜக மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. பாஜகவின் இந்த செயல் குறித்து அதிமுகவே விமர்சனம் செய்யும் அளவிற்கு நிலைமை கைமீறி போனது. அதோடு பாஜகவில் மதுரை மாவட்ட தலைவராக இருந்த சரவணன் கட்சியை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதோடு பாஜகவில் மத அரசியல் செய்யப்படுவதாகவும் சரவணன் புகார் அளித்தார். இவர் நேராக சென்று பிடிஆரிடம் மன்னிப்பும் கேட்டார். ஒரு மாவட்ட தலைவர் இப்படி செய்தது பாஜகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

தர்மசங்கடம் 2
அதோடு கடந்த வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பாஜக நகர தலைவர் பரமகுரு கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவிற்கு கல்லெடுத்து சென்ற லாரி மீது கல்லை வீசி தாக்குதல் நடத்தி உள்ளார். அத்துமீறி கல்லை எடுத்து செல்வதாக பாஜகவினர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். லாரியை மறித்து போலீசில் புகார் அளிக்காமல் இவர்களே லாரியின் கண்ணாடிகளை உடைத்து கலவரம் செய்ததால், போலீசார் பரமகுரு உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

தர்மசங்கடம் 3
இது போக நேற்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். இங்கே உள்ளே செல்ல இவருக்கு அனுமதி தரப்பட்டது. இருந்தாலும் போலீஸ் வந்து கதவை திறக்கும் வரை காத்திருக்காமல் இவர் பூட்டை உடைத்தது பெரிய சர்ச்சையானது. இது தொடர்பாக மொத்தம் 4 பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மசங்கடம் 4
இது போக நேற்று திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார். இளங்கலை பட்டத்திற்கான தேர்வில் இளைஞர் ஒருவரை அனுப்பி இவர் ஆள்மாறாட்டம் செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த உண்மை தெரிய வந்த நிலையில் தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 நாள்
சரியாக 48 மணி நேரத்தில் பாஜகவிற்கு 4 தர்மசங்கடமான சம்பவங்கள் நடந்துள்ளன. அடுத்தடுத்து பாஜகவை சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் இவர்கள் சாதாரண நிர்வாகிகள் கிடையாது. நகர, மாவட்ட தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சனிக்கிழமை பிற்பகலில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக கட்சி 4 தர்மசங்கடங்களை எதிர்கொண்டு உள்ளது. அடுத்தடுத்து பாஜகவில் நடக்கும் சம்பவங்களால் அக்கட்சி விமர்சனங்களையும் சந்தித்து உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications