Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்னர்களின் ஆயக்கலைகள் 64 தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் சீ சீ இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயக் கலைகள் 64 என்னென்ன என்பது தெரியுமா? மன்னர் ஆட்சி காலத்தில் எல்லாம் ஆயக்கலைகள் 64 லும் சிறந்து விளங்கும் வீரனையே மணக்க இளவரசிகள் விரும்புவார்களாம்.

ஆயக்கலைகளின் சிறப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். ஆடல் முதல் கலைகளை வெளிப்படுத்தும் நிதானம் வரை இவைதான் ஆயக்கலைகள். இதை பலரும் கணவன் மனைவிக்கிடையே நிகழும் உறவுகளை குறிப்பதாகவே பலர் தவறாகவே கருதி வருகிறார்கள்.

what are Aayakalaigal 64

உண்மை தெரிந்தால்தான் அவர்கள் இத்தனை நாட்கள் தவறாக நினைத்திருந்தோமே என கருதுவார்கள். அந்த காலத்தில் இந்த கலைகளை பரம்பரை பரம்பரையாக கற்று வந்தார்கள்.

ஆயம் என்றால் மன்றம், கூடம் என்பது அர்த்தம். கலைகளை வளர்க்க மன்றம் வைத்திருந்தனரோ என தோன்றுகிறது. பண்டைய கால மன்னர்கள் இந்த ஆயக் கலைகள் 64 ஐயும் பயின்றதாக மார்தட்டி கூறுவார்கள்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என"
உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்" என கம்பர் பாடியுள்ளார்.

சரி 64 ஆயக்கலைகள் பின்வருமாறு:

1. ஆடல்
2. இசைக்கருவி மீட்டல்
3. ஒப்பனை செய்தல்
4. சிற்பம் வடித்தல்
5. பூத்தொடுத்தல்
6. சூதாடல்
7. சுரதம் அறிதல்
8. தேனும் கள்ளும் சேகரித்தல்
9. நரம்பு மருத்துவம்
10. சமைத்தல்
11. கனி உற்பத்தி செய்தல்
12. கல்லும் பொன்னும் பிளத்தல்
13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14. உலோகங்களில் மூலிகை கலத்தல்
15. கலவை உலோகம் பிரித்தல்
16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17. உப்பு உண்டாக்குதல்
18. வாள் எறிதல்
19. மற்போர் புரிதல்
20. அம்பு தொடுத்தல்
21. படை அணிவகுத்தல்
22. முப்படைகளை முறைப்படுத்தல்
23. தெய்வங்களை மகிழ்வித்தல்
24. தேரோட்டல்
25. மட்கலம் செய்தல்
26. மரக்கலம் செய்தல்
27. பொற்கலம் செய்தல்
28. வெள்ளிக்கலம் செய்தல்
29. ஓவியம் வரைதல்
30. நிலச்சமன் செய்தல்
31. காலக் கருவி செய்தல்
32. ஆடைக்கு நிறமூட்டல்
33. எந்திரம் இயற்றல்
34. தோணி கட்டல்
35. நூல் நூற்றல்
36. ஆடை நெய்தல்
37. சாணை பிடித்தல்
38. பொன்னின் மாற்று அறிதல்
39. செயற்கை பொன் செய்தல்
40. பொன்னாபரணம் செய்தல்
41. பொன் முலாமிடுதல்
42. தோல் பதனிடுதல்
43. மிருகத் தோல் உரித்தல்
44. பால் கறந்து நெய்யுருக்கல்
45. தையல்
46. நீச்சல்
47. இல்லத் தூய்மையுறுத்தல்
48. துவைத்தல்
49. மயிர் களைதல்
50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்
51. உழுதல்
52. மரம் ஏறுதல்
53. பணிவிடை செய்தல்
54. மூங்கில் முடைதல்
55. பாத்திரம் வார்த்தல்
56. நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
57. இரும்பாயுதம் செய்தல்
58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
59. குழந்தை வளர்ப்பு
60. தவறினைத் தண்டித்தல்
61. பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63. மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64. வெளிப்படுத்தும் நிதானம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+