சட்டென மாறிய வானிலை! சென்னையில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்றைய ‛கிளைமேட்’ இதுதான்!
சென்னை: சென்னையில் நேற்று இரவு மற்றும் 2 நாளாக பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் தான் இன்று வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவழை துவங்கி பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளில் இதமான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
அதன்படி நேற்று சென்னையில் இதமான சூழல் நிலவியது. மாலையில் சில இடங்களில் பலத்த காற்று வீசியது. அதன்பிறகு இரவில் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னை நுங்கம்பாக்கம், நந்தனம், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை,மெரினா கடற்கரை, அண்ணாநகர், அண்ணா சதுக்கம் உள்பட பல இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
இந்த மழையின்போது சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இருப்பினும் மழை நின்றபிறகு வேகமாக தண்ணீர் வடிந்தன. நேற்று முன்தினம் இரவும் சென்னையில் பல இடங்களில் மழை பெய்த நிலையில் நேற்று 2வது நாளாக மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் இன்றைய வானிலையை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்து கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையின் இன்றைய காலநிலை எப்படி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications