அணு ஆயுத போராக உருவெடுக்கும் 3ம் உலகப்போர்? இனி என்ன நடக்கும்? கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது.

ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போர் ஒரு பக்கம் தீவிரமாக நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கிவிட்டது. இரண்டு போருமே கண்டிப்பாக நீண்ட கால போராக இருக்கும்.. நீண்ட கால போராக பின்விளைவுகள் இந்த போரின் மூலம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

israel palestine israel palestine war international

10 கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்: சரி இந்த போரில் இதுவரை என்ன நடந்தது.. இந்த போர்கள் எதற்கு நடக்கிறது.. இனி இந்த போரில் என்ன எல்லாம் நடக்கும்? இது உலகப்போராக மாறுமா ? அணு ஆயுத போராக உருவெடுக்குமா என்று பின்வரும் பாயிண்டுகள் மூலம் பார்க்கலாம்.

1.அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

2.சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும்.

3.இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவின் முழு நேர கூட்டாளி ஆகும் முன் அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ரஷ்யா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவின் பெரும்பாலான எல்லையை உக்ரைன்தான் கவர் செய்கிறது. இதற்காக முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள்.

4. இந்த நிலையில்தான் உக்ரைனில் தற்போது கடந்த ஒன்றரை வருடமாக ரஷ்யா போர் செய்து வருகிறது. போர் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது. அதே சமயம் இந்த போர் முடியாமல் அப்படியே நீடிக்கும். இதில் நேட்டோ நேரடியாக தலையிட்டால் அது உலகபோராக வெடிக்கும். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதால் போர் சூழல் மோசமாகும் என்ற அச்சம் உள்ளது.

5. இது போக இப்போது பாலஸ்தீனம் - இஸ்ரேல் - ஈரான் மோதல் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன போர் என்பது பாரம்பரியமாக போருக்கு இருக்கும் முக்கியமான காரணம். அது நிலத்தகராறு. அதாவது பாலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. 1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

6. காசாவில் இருந்து பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில், இஸ்ரேல் அதிகாரத்தை எதிர்க்கும் தனி பகுதிதான் காசா. இதில் இருந்து இஸ்ரேல் முன்பே வெளியேறிவிட்டது. காரணம் இங்கே உள்ள ஹமாஸ் அமைப்பு. இந்த ஹமாஸ் அமைப்பும் - இஸ்ரேலும்தான் தற்போது பாலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன. இப்போது இந்த விவகாரத்தில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தாக்குதல், ஈரான் மேற்கொண்ட தாக்குதல் என்று இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.

7.இந்த இரண்டு நாடுகளை சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

8. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

9. இது மூன்றாம் உலகப்போராக வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளது. ஏனென்றால் இரண்டு போர்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இரண்டு போர்களிலும் அமெரிக்கா தலையிட்டு உள்ளது. ஒன்று ரஷ்ய போர், இன்னொன்று இஸ்ரேல் போர். இரண்டுமே கொள்கை, நில ரீதியாக கடுமையான போர். பல நாடுகள் இதில் தலையிட்டுள்ளன. இந்த காரணங்களுக்காக மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்,

10. அணு ஆயுத போராக இது உருவெடுக்கும் அச்சமும் உள்ளது. உக்ரைனை மண்டி போட வைக்க ஏற்கனவே ரஷ்யா அணு ஆயுதத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளதாக கூறப்பட்டது. இஸ்ரேலின் வலிமையை காட்ட.. ஹமாஸை மொத்தமாக தலைமுறை தலைமுறையாக அழிப்போம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதனால் அவர்களும் கூட அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம். இதனால் இந்த போர் அணு ஆயுத போராக மாறினாலும் ஆச்சரிப்படுத்துவதற்கு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+