ஏடிஎம் பின் நம்பரை மறந்துட்டீங்களா.. பணம் எடுக்க முடியலையே.. இதோ 2 வழிகள் இருக்கே!
சென்னை: ஏடிஎம் பின் நம்பரை மறந்துவிட்டீர்களா, புதிய பின் நம்பரை பெற எளிதாக இரு வழிகள் இருக்கின்றன.
ஏடிஎம் வருவதற்கு முன்பு வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து எடுப்போம். அதன் பிறகு ஏடிஎம் கார்டுகள் வந்ததும் அதன் மூலம் பணம் எடுத்து வருகிறோம்.

இப்போது டிஜிட்டல் முறையிலும் பணபரிவர்த்தனை நடப்பதால் பெரும்பாலானோர் ஏடிஎம்களில் கூட பணத்தை எடுப்பதில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனை தெரியாதோர்தான் ஏடிஎம் மையங்களுக்கும் வங்கிகளுக்கும் போய் பணத்தை எடுக்கிறார்கள்.
அப்படி ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுக்கும் போது பின் நம்பரை மறந்துவிடுவது வாடிக்கையான விஷயம்தான். அந்த கார்டிலேயே ஒரு சீட்டில் எழுதி சிலர் வைப்பார்கள். அது கார்டு மிஸ்ஸானால் மொத்த பணமும் காலியாகும் அளவுக்கு சிக்கலான ஒரு விஷயம். எனவே பின் நம்பரை மனப்பாடமாக மனதில் பதியவைத்திருப்பதே சிறந்தது.
அதிலும் பிறந்த வருடம், பிறந்த தேதி, குழந்தைகளின் பிறந்த தேதி, வருடம் இவற்றையெல்லாம் வைக்கக் கூடாது. யாருமே கெஸ் செய்ய முடியாத எண்களை வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிட்டால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது கவலைப்பட தேவையில்லை. ஏடிஎம் இயந்திரம் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் பாதுகாப்பாக பின் நம்பரை நாமே எளிதில் உருவாக்கிவிடலாம்.
எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டும். வேறுவங்கியின் ஏடிஎம் மூலம் பின் நம்பரை மாற்ற முடியாது. வங்கிக் கணக்கு உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று கார்டை மிஷினில் போட்டு forgot pin என்ற ஆப்ஷனை அழுத்த வேண்டும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை டைப் செய்யும்படி திரையில் ஒரு செய்தி தோன்றும்,
அப்போது மொபைல் எண்ணை மிஷினில் டைப் செய்ய வேண்டும். மொபைல் எண்ணை பதிவு செய்ததும் அந்த எண்ணுக்கு ஓடிபி எண் கிடைக்கும். அதை டைப் செய்தால் புதிய ஏடிஎம் பின் எண்ணை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது போல் ஆன்லைனிலும் பின் எண்ணை மாற்றலாம். நெட்பேங்கிங் இணையதளத்திற்கு போய் ஏடிஎம் பின் எண்ணை மாற்ற வேண்டும்.
ஆன்லைன் பேங்கிங் இணையதளத்தில் உள்ளே நுழைந்ததும் ஏடிஎம் கார்டு பகுதிக்கு சென்று பின் மாற்றும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். அப்போது ஏடிஎம் கார்டில் உள்ள சிவிவி எண்ணின் கடைசி 3 இலக்கங்கள், கார்டு காலாவதியாகும் மாதம், ஆண்டு போன்றவற்றை குறிப்பிட வேண்டும். இதையடுத்து வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டால், அந்த எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதை திரையில் அதற்கான இடத்தில் டைப் செய்து சமர்ப்பித்தால் புதிய பின் நம்பரை உருவாக்கலாம். இந்த இரு வழிகள் மூலம் பின் நம்பரை மாற்றலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications