தப்பு இருக்கு! ஓபிஎஸ் எடுத்த கடைசி பிரம்மாஸ்திரம்.. 3 கோணங்கள்.. இதுமட்டும் நடந்தால் அதிமுகவே மாறும்
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ள நிலையில், வழக்கில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு தொடர்பாக பார்க்கும் முன் இதற்கு முன் அதிமுக தொடர்பாக நடந்த வழக்குகளை பார்க்கலாம்.
வழக்கு 1 - அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக முதலில் வந்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழுவை நடத்த அனுமதி கொடுத்தார்.
மேல்முறையீடு வழக்கு 2 - இரட்டை நீதிபதிகள் அமர்வில் அதிகாலை 4 மணிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் பொதுக்குழுவில் அனுமதிக்கப்பட்ட 23 மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்குகள்
முதல் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்தது. இரண்டாவது தீர்ப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வந்தது. இதையடுத்து நடந்த ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அப்போதே ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தது.

நீக்கம்
வழக்கு 4 - இதன்பின் கூடிய பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடைசி தீர்ப்பு
வழக்கு 5 - இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் இரட்டை நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது பொதுக்குழு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி அதிமுக கேஸில் தீர்ப்புகள் மாறி மாறி வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேல்முறையீடு
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு மிக முக்கியமானது . ஏனென்றால் இதுதான் கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் கையில் உள்ள கடைசி அஸ்திரம். இதில் தீர்ப்பு எதிராக வந்தால் எல்லாம் ஓவர். இந்த மேல்முறையீட்டு மனுவில், உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வில் சில தவறுகள் இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு குறிப்பிட்டு உள்ளது. இதைத்தான் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதில் வழக்கு 3 கோணங்களில் செல்ல வாய்ப்பு உள்ளது.

எடப்பாடிக்கு ஆதரவு
எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்படலாம். அதாவது, ஜூலை 11ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பு சரியானது என்று தீர்ப்பு வழங்கலாம். அப்படி வழங்கினால் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தொடருவார். ஓ பன்னீர்செல்வமும் அதிமுக போராட்டம் முடிவிற்கு வரும். அவரால் மீண்டும் சட்ட ரீதியாக போராடுவது கடினம்.

ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு
இல்லை என்றால் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம். அதாவது பொதுக்குழு செல்லாது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழுவை கூட்டி இருக்க கூடாது. அதனால் இது தவறு. எனவே அதிமுகவில் ஜூலை 11ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும். பொதுக்குழுவை மீண்டும் நடத்த வேண்டும் என்றால் ஓ பன்னீர்செல்வம் அனுமதி வேண்டும் என்று உத்தரவு வரலாம். இந்த உத்தரவு வந்தால் அதிமுகவில் மீண்டும் எல்லாம் மாறும்.

தேர்தல் ஆணையம்
இன்னொரு கோணமும் இதில் உள்ளது. சட்டப்படி பொதுக்குழுவில் நீதிமன்றம் தலையிட முடியாது. தேர்தல் ஆணையம் மட்டுமே தலையிட முடியும். இதனால் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்று அறிவிக்கப்படலாம். அதோடு தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறபிக்காமல், பரிந்துரை போல செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் அதிமுக நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக பந்து செல்லும்.












Click it and Unblock the Notifications