4 சிக்கல்கள்! சிஎஸ்கே அணி உடனே மாற்ற வேண்டிய டாப் 4 விஷயங்கள்! தோனி ரேடாரில் முக்கிய வீரர்
சென்னை: 2023 ஐபிஎல் சீசனில் அதிரடியாக வந்தாலும் கூட சிஎஸ்கே அணி 4 முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
2023 ஐபிஎல் சீசன் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது.
இதுவரை 8 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே சீசனில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி மீண்டும் ராஜஸ்தானிடம் நேற்று வீழ்ந்தது.
தோல்வி:நேற்று முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 202/5 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. இதில் ராஜஸ்தான் தொடக்க வீரர் யேசெஸ்வி ஜெய்ஷ்வால் 77 ரன்கள் எடுத்தார். அதேபோல் துருவ் ஜூரேல் 34 ரன்கள் எடுத்தார்.
ஜோஸ் பட்லரும் 27 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்ட முயன்றாலும் முடியவில்லை. கான்வே எவ்வளவு அடிக்க முயன்றும் 8 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.

ஆனால் ருத்துராஜ் மட்டும் அதிரடியாக ஆடி 47 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சிவம் துபே 52 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஜடேஜா 23 ரன்கள் எடுக்க இவர்கள் இருவரும் கடைசி ஓவர்களில் அடிக்க முயன்றும் கூட சிஎஸ்கே அணியால் வெற்றிபெற முடியவில்லை.
சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 170-6 ரன்கள் மட்டுமே எடுக்க 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மாற்றம்:அடுத்த போட்டிகளில் தோல்வியை தவிர்க்க சிஎஸ்கே அணி பின்வரும் மாற்றங்களை செய்ய வேண்டும்.
மாற்றம் 1 - மொயின் அலி:சிஎஸ்கே அணியில் மொயின் அலி பார்மில் இல்லை. பவுலிங் , பேட்டிங் இரண்டிலும் பார்மில் இல்லை. இதனால் மிட்சல் சாண்ட்னரை உள்ளே கொண்டு வர வேண்டும். ஏற்கனவே இவர் தோனியின் ரேடாரில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சிஎஸ்கே வீரர் மிட்சல் சாண்ட்னர் சிறப்பாக ஆடினார். ஏற்கனவே மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி சான்டர் சிறப்பாக பவுலிங் செய்தார். அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.
இவரை உள்ளே கொண்டு வர வேண்டும்.
மாற்றம் 2 - அம்பதி ராயுடு:அம்பதி ராயுடு பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவர் சரியான பார்மில் இல்லை. அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 5 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது.
இன்னிங்ஸ்:- 5
ரன்கள்:- 74
சராசரி:- 24.67
ஸ்டிரைக் ரேட்:- 148
அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை. அவருக்கு பதிலாக வேறு இந்திய வீரரை மிடில் ஆர்டரில் சோதிக்கலாம்.

மாற்றம் 3- ஆகாஷ் சிங்:சிஎஸ்கேவில் பவுலிங் செய்யும் ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக சிஎஸ்கேவின் ஆடும் அணியில் ராஜ்வர்தன் ஹங்காகேகர் எடுக்கலாம். இவர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர். இவருடைய சிறப்பம்சம் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு இன் ஸ்விங் செய்ய கூடியவர். பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்ட் பவுலர்கள் அவுட் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ராஜ்வர்தன் ஹங்காகேக இன் ஸ்விங் செய்வார். அதோடு இவரின் இன்னொரு சிறப்பம்சம். இவர் சிறப்பான பேட்ஸ்மேனும் கூட. கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன். அண்டர் 19 போட்டிகளில் இவர் முரட்டு அடி அடித்த ஆட்டங்கள் பல உள்ளன.
ஹெலிகாப்டர் ஷாட், ஸ்விப் ஷாட் என்று விதவிதமாக சிக்ஸ் அடிக்க கூடியவர். கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெல்ல ஐவரும் முக்கிய காரணமாக இருந்தார். இதில் ராஜ்வர்தன் ஹங்காகேகர் 141 கிமீ வேகத்தில் பவுலிங் வீசினார். லோக்கல் போட்டிகளில் இவர் 148 கிமீ வரை பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாக ஆடினார். இவரை ஆடும் அணியில் எடுக்க வேண்டும்.
மாற்றம் 4 - பேட்டிங் ஆர்டர்:பெரும்பாலும் சேஸிங்கில்தான் சிஎஸ்கே அணி தோல்வி அடைவதால் சிஎஸ்கே அணி பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும். தோனியை இன்னும் கொஞ்சம் சீக்கிரம் இறக்கலாம். அவரின் பேட்டிங்கை பயன்படுத்தும் விதமாக அவரை இறக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications