சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லா தெரிஞ்சிக்கோங்க.. "இந்த" 4 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு ரொம்ப டஃப்பாமே?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி பெற மிகவும் கடினமான தொகுதிகள் என கள நிலவரங்கள் சொல்கின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்! சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. அது போல் அதிமுக 178 இடங்களில் போட்டியிடுகின்றன. இவற்றில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேராக 125 இடங்களில் போட்டியிடுகின்றன. 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சென்னையில் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஜெயலலிதா போட்டி

ஜெயலலிதா போட்டி

சென்னையில் திமுக வெற்றி பெற 4 தொகுதிகள் மிகவும் கடினமான தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அவை ஆர் கே நகர், ராயபுரம், மயிலாப்பூர் மற்றும் தி நகர் ஆகியவை ஆகும். இதில் ஆர் கே நகர் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டதால் நட்சத்திர தொகுதியாக உயர்ந்தது.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

அவர் மறைந்தவுடன் ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுகவை புறந்தள்ளிவிட்டு சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார். தற்போது ஆர் கே நகரில் அதிமுக சார்பில் ஆர் எஸ் ராஜேஷ், திமுக சார்பில் எபிநேசர், மக்கள் நீதி மய்யம் சார்பில் பாசில் , நாம் தமிழர் கட்சி சார்பில் கௌரிசங்கர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் 7 முறை அதிமுக ஜெயித்துள்ளது. ஆனால் திமுகவோ இரு முறை மட்டுமே வென்றுள்ளது.

அதிமுக

அதிமுக

அது போல் ராயபுரம் தொகுதியை எடுத்துக் கொண்டோமோயானால் டி ஜெயக்குமார் எம்எல்ஏவாக உள்ளார். இந்தத் தொகுதி டி ஜெயக்குமாரின் கோட்டை என சொல்லலாம். இங்கு வரும் தேர்தலில் டி ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஐட்ரீம் ரா மூர்த்தி, அமமுக சார்பில் சிபி ராமஜெயம், நாம் தமிழர் கட்சி சார்பில் கமலி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

திமுக எத்தனை முறை

திமுக எத்தனை முறை

மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளவர் ஆர் நடராஜ். இந்த தொகுதியில் திமுக 5 முறையும் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை அமமுக சார்பில் டி கார்த்திக், நாம் தமிழர் கட்சி சார்பில் மகாலட்சுமி, அதிமுக சார்பில் நடராஜ், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீப்ரியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

தி நகர் சட்டசபைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவின் சத்திய நாராயணன். இந்த தொகுதியில் திமுக 5 முறையும் 4 முறையும் வென்றுள்ளது. இந்த முறையும் அதிமுக சார்பில் சத்திய நாராயணன், திமுக சார்பில் ஜெ கருணாநிதி, மநீம சார்பில் பழ கருப்பையா, நாம் தமிழர் கட்சி சார்பில் பா சிவசங்கரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

English summary
RK Nagar, Royapuram, Mylapore and T.Nagar are very tough to win for DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X