உயிரை கொடுத்து ஆடிய தோனி.. பிட்ச் சாதகமாக இருந்தும்.. சிஎஸ்கே தோற்க காரணம் என்ன? 4 ஷாக்கிங் பின்னணி
சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
ஐபிஎல் 2023 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அடுத்து புனேவிற்கு எதிராக நடந்த போட்டியில் வென்றது.
இதையடுத்து மும்பைக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது.
முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்ட்னர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்ட்னர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
இப்படி வரிசையாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த சிஎஸ்கே நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. டெவோன் கான்வே 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

காரணம் 1 - அஸ்வின் ஸ்பின்: நேற்று அஸ்வினின் பவுலிங்தான் மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியை காலி செய்தது. மிடில் ஆர்டரில் வரிசையாக ரஹானே, துபே விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்தார். அதன்பின் மொயின் அலி, ராயுடு விக்கெட்டுகளை சாம்பா, சாஹல் ஆகியோர் எடுத்தனர். இதனால் சிஎஸ்கே அணி பின்னடைவை சந்தித்தது. அஸ்வின் 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தது திருப்பு முனையாக இருந்தது.
காரணம் 2 - மிடில் ஆர்டர்: மிடில் ஓவர்களில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. ஏழாவது முதல் 15வது ஓவருக்கு இடையில்தான் இந்த மேட்ச் சிஎஸ்கே கையில் இருந்து சென்றது. டெவோன் கான்வே (38 பந்துகளில் 50), ஷிவம் துபே (9 பந்துகளில் 8), மொயீன் அலி (10 பந்துகளில் 7) ரன்கள் எடுத்தனர். இவர்கள் வேஸ்ட் செய்த பந்துகள் சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பின.

காரணம் 3 - ஸ்ட்ரைக் ரொட்டேஷன்: பொதுவாக ஓப்பனிங்கில் மெதுவாக ஆடினாலும் மிடில் ஓவர்களில் வேகம் காட்ட வேண்டும். முடியவில்லை என்றால் மிடில் ஓவர்களில் ரொட்டேஷன் செய்ய வேண்டும். ஆனால் நேற்று சிஎஸ்கே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் ரொட்டேஷன் கூட செய்யாமல் திணறினார்கள். நிறைய டாட் பந்துகளை வைத்தது சொதப்பலுக்கு காரணம் ஆனது.
காரணம் 4 - பேட்டிங் சொதப்பல்: நேற்று தோனி, ஜடேஜா தவிர யாரும் சரியாக ஆடவில்லை. ருத்து முதல் முறை சொதப்பி இருக்கிறார். கான்வே 38 பந்தில் 50 ரன்கள் எடுத்தாலும் அவரின் ஸ்டிரைக் ரேட் மிக மோசம். அதேபோல் ராயுடு, துபே, மொயின் அலி என்று வரிசையாக டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பிவிட்டது. இந்த 4 விஷயங்கள்தான் சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications