அந்த 5 விஷயம்.. பாகிஸ்தானை எழுந்திருக்கவே விடாமல் புரட்டி அடித்த இந்தியா..வெற்றிக்கு காரணமே இதுதான்
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டத்தில் இந்தியா வென்றது. இந்த வெற்றிக்கு பின் 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
8-0.. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 8 முறை பாகிஸ்தானை வீழ்த்தி.. ஒரு முறை கூட பாகிஸ்தானிடம் வீழாமல் இந்தியா சாதனை பெற்றுள்ளது. புதிய வலிமையாக பாபர் தலைமையிலான படையையும் கூட நேற்று வீழ்த்தி ரோஹித் படை இந்த சாதனையை தக்க வைத்துள்ளது.
இந்தியா வெற்றி: ஷகீன் அப்ரிடி, பாபர் ஆஸம், ரிஸ்வான், ரஃப் ஆகியோரின் படையை மிக எளிமையாக துவம்சம் செய்து.. கிரிக்கெட் இவ்வளவு ஈஸியா என்று கேட்கும் அளவிற்கு எளிமையான மேட்சை ஆடி அசத்தி உள்ளது இந்திய அணி. இந்த மேட்சில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

20 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் ஷாபிக் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். 41 ரன்னில் முதல் விக்கெட் விழ 73 ரன்னில் இமாம் உல் ஹக் விக்கெட்டை 36 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா எடுத்தார். அடுத்து இறங்கிய பாபர் ஆஸம் 50 ரன்கள் இருக்கும் போது அவரின் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். அடுத்து ரிஸ்வானும் 49 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் அப்படியே சீட்டு கட்டு போல சரிந்தது. ஷகீல் 6, இப்திகார் 4, ஷதாப் கான் 2, முகமது நவாஸ் 4 என்று மிடில் ஆர்டர் அப்படியே சரிந்தது. அதன்பின் பவுலர்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இன்னொரு பக்கம் இந்தியா பவுலிங்கில் சிராஜ் 2 விக்கெட், பும்ரா 2 விக்கெட், குல்தீப் யாதவ் 2 விக்கெட், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட் என்று அசத்தினர். நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக பவுலர்கள் விக்கெட்டுகள் மிக சிறப்பாக இருந்தது.
வெற்றிக்கு காரணம்; இந்த வெற்றிக்கு பின் 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
காரணம் 1: இந்தியாவின் டாஸ் வெற்றி இதற்கு முக்கிய காரணம். டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா சரியாக பவுலிங் எடுத்தார். பேட்டிங் பிட்ச் என்றாலும் போக போக பிட்ச் இரண்டாவது பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். அதனால் ரோஹித் பவுலிங் எடுத்தார். அது அணிக்கு சாதகமாக இருந்தது.
காரணம் 2: இன்னொரு பக்கம் ரோஹித் கேப்டன்சி மிக சிறப்பாக இருந்தது. பவுலிங் ரொட்டேஷன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக இருந்தது. பாகிஸ்தான் அணியை திணற வைத்ததே இந்த பவுலிங் ரொட்டேஷன்தான். அதேபோல் ரோஹித் சரியான நேரத்தில் துல்லியமாக டிஆர்எஸ் எடுத்தது அணியின் வெற்றிக்கு சாதகமாக இருந்தது.

காரணம் 3: இந்தியாவின் பவுலிங். முக்கியமாக சிராஜ் விக்கெட்டை தொடங்கி வைத்தது.. துல்லியமான ஸ்லோ பால், யார்க்கர் மூலம் பும்ரா போட்ட பிரஷர்.. இன்னொரு பக்கம் குல்தீப் யாதவின் சைனா மேன் சுழல் மூன்றும் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான பிரஷரை கொடுத்தது. இதை எதிர்கொள்ள முடியாமல் போனதே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.
காரணம் 4: இந்திய அணியின் பேட்டிங் . ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே சுதாரித்து 85 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்கள் மீதான அச்சத்தை இந்திய அணி காலி செய்துள்ளது. முன்பெல்லாம் பாகிஸ்தான் பவுலர்கள் என்றால் இந்திய டாப் ஆர்டரின் கால்கள் நடுங்கும். நேற்று அந்த பயத்தை இந்தியா திறந்துள்ளது.
காரணம் 5: நேற்று டாப் ஆர்டர் விக்கெட் விழுந்த பின் அதிரடியாக ஆடி மேட்சை முடித்து வெற்றிபெற நினைத்தால் இந்தியாவின் விக்கெட்டுகள் மேலும் விழும் வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் கவிழ்ந்தது போல கவிழாமல்.. இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் - ராகுல் இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டை விழாமல் வெற்றிபெற வைத்தனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications