6 பாயிண்ட்ஸ்.. செந்தில் பாலாஜி கையில் எடுத்த பிரம்மாஸ்திரங்கள்.. இதுதான் இன்று உதவ போகிறது?
சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிரான கஸ்டடி வழக்கில் நேற்று அவரின் வழக்கறிஞர் இளங்கோ முக்கியமான சில வாதங்களை வைத்தார். அவர் வைத்த வாதங்கள் இன்று வழக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற காவலில் வைப்பதற்கான உத்தரவை ரத்து செய்வது தொடர்பான மனு, ஜாமீன் மனு உடனே நீதிமன்ற அறையில் விசாரிக்கப்பட்டது.

ரெய்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. சமீபத்தில் அவருக்கு நெருக்கமான இடத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அமலாக்கத்துறை ரெய்டுக்கு முன் வருமான வரித்துறை நடந்தது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்றாக.. நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக இந்த ரெய்டுகள் பார்க்கப்பட்டன.
அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்தது. முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் யாரையும் விட்டு வைக்காமல் வருமான வரித்துறையினர் தீவிரமாக ரெய்டு மேற்கொண்டது. அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரருமான சங்கரானந்தா வீட்டிலும், அலுவலகத்திலும் ரெய்டு மேற்கொண்டது.
அமலாக்கத்துறை ரெய்டு; அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர்.
நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழக்கு: இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வந்தது. இதற்காக அமலாக்கத்துறை சார்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனால் அவர் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார்.
அவரின் அறையிலேயே இந்த வழக்கு விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள், செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இதையடுத்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு சென்று வாதம் வாதம் வைத்தனர்.
சிகிச்சை அறையிலேயே நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. ஆனால் செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை. அதேபோல் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் இளங்கோவன் வாதம் வைத்துள்ளார்.
வாதங்களை கேட்ட பின், செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு உள்ளதால் உடனே செந்தில் பாலாஜி தரப்பு சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பு வாதம்: இதையடுத்து இடைக்கால ஜாமீன் அல்லது கஸ்டடியை நீக்குவது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் கோர்ட்டில் வாதம் வைத்த போது பின் வரும் பாயிண்டுகளை கூறினார்.
1. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்டை நிராகரிக்க வேண்டும்; அதிகாலை, மனித உரிமை மீறி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .
2. அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்துள்ளனர். மனைவியிடம், உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை. அமலாக்கத்துறை விதி மீறல்கள் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி கைது செய்துள்ளனர்.
3. கைதுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்படவில்லை. கைதுக்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை.
4. செந்தில் பாலாஜியிடமே ஏன் என்று சொல்லாமல் கைது செய்துள்ளனர். மனித உரிமையை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்., என்று வாதம் வைத்தார்.
5. நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை வரை விசாரித்தனர். அவருக்கு உணவு கூட கொடுக்காமல் டார்ச்சர் செய்துள்ளனர்.
6. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று கூறும் போது அவசர அவசரமாக கைது ஏன்? ஆகிய வாதங்களை வைத்தார்.












Click it and Unblock the Notifications