உதயநிதி ஸ்டாலின் கைக்கு வந்த 7 பெரிய அதிகாரங்கள்.. இதுதான் ரொம்ப முக்கியம்.. நோட் பண்ணுங்க
சென்னை: துணை முதல்வரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன மாதிரியான பவர்கள் இருக்கும்.. அவருக்கு அரசியல் ரீதியாக என்ன மாதிரியான சக்திகள் இருக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி நேற்று பதவி ஏற்றார். ஒரு பக்கம் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.,. இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போது, 14 மாநிலங்களில் (28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில்) மட்டுமே துணை முதல்வர்கள் உள்ளனர். இதில், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட துணை முதல்வர் பதவியில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்வாகி உள்ளார்.
அதிகாரங்கள் என்னென்ன ?: அவருக்கு வழங்கப்படும் 7 அதிகாரங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
1. பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியாக இருக்கும் பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும்.
2. மாநில அமைச்சர்கள் குழுவின் சீனியாரிட்டியில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி ஆகும் இது. இதனால் முதல்வருக்கு அடுத்து இவர்தான்.
3. துணை முதலமைச்சர் பொதுவாக உள்துறை அமைச்சர் போன்ற கேபினட் இலாகாவையும் வைத்திருப்பர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்துறையை வைத்துள்ள நிலையில், அவர் இல்லாத நேரங்களில்.. அவர் வெளிநாடு செல்லும் நேரங்களில் உதயநிதி ஸ்டாலின் அவரின் துறைகளை கவனிப்பார். பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது.. முதல்வருக்கு துணையான பதவிதான்.
4. ஒரு முதல்வர் இல்லாத நேரங்களில் அவரின் முடிவுகளை எடுக்கும் பவர் துணை முதல்வருக்கு உண்டு. அமைச்சரவை கூட்டங்களை நடத்த முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் உத்தரவின் பெயரில் துணை முதல்வர் கூட்டங்களை நடத்த முடியும்.
5. முக்கியமான ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்.
6. துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. அப்படிதான் நேற்று வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இனி அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்.
7. உதயநிதி ஸ்டாலின் பிறப்பிக்கும் உத்தரவுகளை முதல்வர் மாற்ற முடியும் என்றாலும்.. அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்பதால் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமைச்சர்கள் இனி கேட்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
பதவி அளிக்கப்படும் முன் நடந்தது என்ன?: முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதில்.. ஸ்டாலினுக்கும் பெரிய ஆர்வம் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது.
உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஆட்சி நிர்வாகத்திற்கும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications