7 கன்னி வெடிகள்.. 5 நாள் காவலில் செந்தில் பாலாஜி சொல்லப்போவது என்ன? தயாராகும் ரூம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் முக்கியமான சில கேள்விகளை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What are the 7 questions that will be asked to Senthil Balaji by Enforcement Directorate during the custody?

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.

ஜூன் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.

கைது: மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

What are the 7 questions that will be asked to Senthil Balaji by Enforcement Directorate during the custody?

இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கடந்த ஒன்றரை வாரமாக தீவிரமாக விசாரணை நடந்து வந்தது.

விசாரணையின் முடிவில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வரும் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் இருக்க போகிறார். இதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் முக்கியமான பின்வரும் கேள்விகளை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்விகள்: 1 . போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்தது உண்மையா? அதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?

2. இதில் பெறப்பட்ட பணம் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதா? 3. செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கு இதில் தொடர்பு உள்ளதா? 4. எந்தெந்த நிறுவனங்களில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டது. 5. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது. 6. இதில் முதலீடுகள் மறைக்கப்பட்டு இருந்தால் அதற்கு உடந்தையாக இருந்தது யாரெல்லாம்? 7. தற்போதைய அரசு நிர்வாகிகள் அதிகாரிகள் யாருக்கெல்லாம் இதில் பங்கு உண்டு என்று அதிகாரப்பூர்வமாக இதில் கேள்விகளை அமலாக்கத்துறை கேட்கும் என்கிறார்கள்.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிகழ்கால தமிழ்நாடு அரசுக்கு எதிராக சில கேள்விகள் கேட்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவரை இந்த அமலாக்கத்துறை புழல் சிறையில் இருந்து காவலில் எடுக்க உள்ளது. இதனால் அவரை அடைத்து வைக்கவும், விசாரணை செய்யவும் அறைகளை அமலாக்கத்துறை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+