திடீரென எதிரியான தம்பி.. விஜயை கடுமையாக அட்டாக் செய்த சீமான்! என்ன நடந்தது? 7 முக்கியமான காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். தம்பி என்று விஜயை கூறி வந்த சீமான் இப்போது வெளிப்படையாக எதிரி என்று கூற தொடங்கி உள்ளார்.

விஜய் கூறியது கொள்கையல்ல, கூமுட்டை! அதுவும் அழுகிய கூமுட்டை!.. ஒன்னு சாலையின் அந்த ஓரத்தில் நில்லு, இல்லை இந்த ஓரத்தில் நில்லு, நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப்போயிடுவே.. பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? இந்தியை வலுக்கட்டாயமாக மாற்றியது காங்கிரஸ்; காங்கிரஸ், பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்?" ரைமிங்கா வருகிறது என்பதற்காக எதையும் விஜய் பேசக் கூடாது.

seeman naam tamilar katchi vijay

திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வது. விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் ஒன்றா? சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறார். சாதி மதத்தோடு இனத்தையும் மொழியையும் ஒப்பிடுவது சரியா? ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம் மொழி. மதமும் சாதியும் நமது அடையாளம் அல்ல மொழிதான் நமது அடையாளம்.

சேலத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு 40 பேர் வந்தார்கள். கடை திறக்க வந்த நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் வந்தார்கள். விமானப்படை சாகசத்தைப் பார்க்க 15 லட்சம் பேர் வந்தார்கள். எங்கள் தலைவன் எங்களுக்கு கற்பித்தது.. 5 பேர் கூடினால் சாதிக்கலாம்.. 50 பேர் கூடினால் விவாதிக்கலாம். எனக்கு 36 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். எனது கூட்டம் 36 லட்சம் பேர். இப்போ எது பெரிய கூட்டம். இன்னொரு நடிகர் அழைத்தாலும் கூட்டம் வரும். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டம் இப்போது கூடிவிட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

என்ன காரணம்?: இதை தொடர்ந்து விஜய் ஆதரவாளர்களுக்கும் - சீமான் ஆதரவாளர்களுக்கும் இடையே மிக கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. எக்ஸ் பக்கத்தில் மாறி மாறி கடுமையான வார்த்தைகளால் பேசி வருகின்றனர். சீமான் விஜயை விமர்சனம் செய்ய பின்வரும் காரணங்கள் உள்ளன.

1. விஜய் சீமானின் அதே திமுக எதிர்ப்பு அரசியலை முன் வைக்கிறார். இது நாம் தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.

2, நாம் தமிழர் அரசியலுக்கு வந்ததில் இருந்து.. இதுவரை ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. இதனால் நாம் தமிழர் தொண்டர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.

3. இவர்கள்.. விஜயின் அரசியல் வருகையால் அங்கே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. தவெகவில் இணையும் வாய்ப்புகள் உள்ளன.

4. திமுக எதிர்ப்பு + தமிழ் கொள்கைகள் + திராவிடம் என்று பேசுவதால் அதிமுக, நாம் தமிழர் வாக்குகள் விஜய் பக்கம் செல்லும்.

5. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது.

6. நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சீமான் விஜய் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

7. சீமானின் கொள்கை + திராவிட கட்சிகளின் கொள்கைகளை விஜய் சேர்த்து பேசுகிறார். இதனால் சீமானின் அரசியல் கொள்கை, அஸ்திவாரத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+