பாஜக - என்டிஏவிற்கு ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்கலைன்னா.. நடக்க போகும் 7 விஷயங்கள்.. இப்பவே நடுங்குதே!
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் ஒருவேளை பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால்.. என்டிஏ கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சிலர் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
2024 லோக்சபா தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கும் நிலையில், அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ், தற்போதைய அரசியல் நிலவரப்படி பாஜக 250க்கும் குறைவான இடங்களையே பெறும். பாஜக மெஜாரிட்டி பெற வாய்ப்பு இல்லை. முக்கியமாக தேர்தல் இறுதிக்கட்டத்தின் போது உ.பி. மற்றும் பீகாரில் இருந்து பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகம் ஆகும் பட்சத்தில் பாஜகவிற்கு மட்டுமல்ல என்டிஏவுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். என்டிஏவை விட இந்திய கூட்டணி அதிக இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். இந்தியா கூட்டணி 250 இடங்களை தாண்டி பெற வாய்ப்புகள் உள்ளன.

பாஜக தனித்து மெஜாரிட்டி பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாகவே உள்ளன. சிலர் சர்வே ரீதியாக பொய்களை சொல்கின்றனர்., என்று அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
யோகேந்திர யாதவ் மட்டுமின்றி இன்னும் பலர் இதே போன்ற சர்வேக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. என்டிஏவிற்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. கண்டிப்பாக பாஜகவிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. சரி ஒருவேளை 2024 லோக்சபா தேர்தலில் ஒருவேளை பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால்.. என்டிஏ கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சிலர் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
நடக்க வாய்ப்பு உள்ள 7 விஷயங்கள் பின் வருமாறு:
1. என்டிஏவிற்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் முதல் கட்சியாக பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை பாஜக நாடும். ஆனால் விகே பாண்டியனை பகைத்துக் கொண்டது பாஜகவிற்கு எதிராக மாறி உள்ளது. பாஜகவிற்கு கண்டிப்பாக தேர்தலுக்கு பின் அதிர்ச்சி அளிக்கும்.
2. என்டிஏவிற்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி உதவியை நாடலாம். அவர் அணி சேராத கட்சிதான். ஆனால் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உடன் பாஜக கூட்டணி வைத்து உள்ளதால் அது சாத்தியம் ஆவதும் கடினம்.
3. என்டிஏவிற்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் உதவியை பாஜக நாடும். அவர்கள் ஏதாவது இடம் வெல்லும் பட்சத்தில் அதை தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சி செய்யும். ஆனால் சந்திரசேகர ராவும் தீவிர பாஜக எதிர்ப்பாளர்தான். ஒரு காலத்தில் பாஜகவை ஒழிப்பேன் என்று தீவிரமாக சுற்றியவர்.
4. அதிமுக தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களை எடுக்கும் பட்சத்தில்.. அணி சேராத அதிமுகவின் உதவியை கூட பாஜக நாடும் வாய்ப்புகள் உள்ளன.
5. இதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை என்றால் இந்திய கூட்டணியில் இருந்து ஆட்களை தூக்க பாஜக பார்க்கும். முதலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உடன் கூட்டணி வைக்க கூட என்டிஏ முயலும்.
6. மேற்கு வங்கம் செட்டாகவில்லை என்றால் திமுக தொடங்கி மற்ற பல கட்சிகளை கூட தங்கள் கூட்டணிக்கு பெரிய பெரிய அமைச்சரவை போஸ்டுகளை கொடுத்து பாஜக அழைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
7. உதாரணமாக 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. பாஜக 138 இடங்களை வென்றது. அப்போது பாஜக கூட்டணிக்கு தீவிரமாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை செய்தது. முக்கியமாக அப்போது சிபிஐ(எம்) 43 இடங்களை வென்றது. ஆனால் பாஜகவுடன் யாரும் அப்போது கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதேபோல் இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணிக்கு போக மாநில கட்சிகள் விரும்புமா என்பது சந்தேகமே!












Click it and Unblock the Notifications