வெறும் ரூ.51,237 மட்டும் தான்.. இடும்பாவனம் கார்த்திக் - வீரப்பன் மகளின் சொத்து மதிப்பு இதுதான்! முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நாம் தமிழர் கட்சியின் பிரபல வேட்பாளர்களாக இடும்பாவனம் கார்த்திக் மற்றும் வீரப்பன் மகள் வித்யாராணி ஆகியோர் உள்ளனர். இதில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிட்டுள்ளார். அதேபோல் தர்மபுரி மாவட்டம் மேட்டூர் சட்டசபை தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி களமிறங்கி உள்ளார். இவர்கள் இருவரும் தங்கள் போட்டியிடும் சட்டசபை தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கி உள்ளது. 234 சட்டசபை தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களையும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சீமான் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

what-are-the-assests-value-of-ntk-candidates-idumbavanam-karthik-and-veerapan-daughter-vidhya-rani

அதேபோல் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களின் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டுமக்களிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருக்கும் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் வீரப்பன் மகள் வித்யாராணி ஆகியோரின் சொத்து மதிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

இடும்பாவனம் கார்த்திக்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் இடும்பாவனம் கார்த்திக். இவர் வரும் சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.

ரூ.51,237 தான் சொத்து

அதில் கையில் ரூ.30 ஆயிரம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதவிர ஒரு வங்கி கணக்கில் ரூ.16,084ம், இன்னொரு வங்கி கணக்கில் ரூ.5,153ம் வைத்திருப்பதாக கூறியுள்ளார். மொத்தமாக அசையும் சொத்தாக ரூ.51,237 தான் உள்ளதாக கூறியுள்ளார். தங்க நகைகள், கார், பைக், வீடு என எதுவும் தனது பெயரில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பு வெறும் ரூ.51,237 தான் என குறிப்பிட்டுள்ளார்.

வித்யாராணி வீரப்பன்

அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் மேட்டூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது கையில் ரூ.1.31 லட்சம் இருப்பதாக வேட்புமனுவில் கூறியுள்ளார். இதுதவிர ஒரு வங்கி கணக்கில் ரூ.24,120, இன்னொரு வங்கி கணக்கில் ரூ.1,000 உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதவிர ரூ.5.42 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தங்கம் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் மொத்தம் ரூ.6,98,120 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து அவரிடம் உள்ளது. அசையா சொத்து எதுவும் இல்லை. மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.3.50 லட்சம் கடன் வாங்கி உள்ளதாக ரெிவித்துள்ளார்.

சீமான் சொத்து மதிப்பு

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதில் சீமான் தன்து கைியல் ரூ.50 ஆயிரம், ரூ.39 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள், 150 கிராம் தங்கம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். வங்கியில் 5,11,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டி இருந்தார். அதேபோல் மனைவி கயல்விழி கையில் ரூ.35,000, ரூ.2.57 கோடி சொத்து, 1 கிலோ 600 கிராம் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+