Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TNEA 2025! Artificial Intelligence and Data Science சேர! தமிழகத்தில் டாப் 20 கல்லூரிகள் இவைதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் (Artificial Intelligence) படிக்க தமிழகத்தில் தரமான 20 கல்லூரிகள் குறித்து தெரியுமா? இங்கு நிபுணர்களை கொண்டு இந்த படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் இந்த படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் போது கைநிறைய சம்பளத்துடன் வேலையும் கிடைக்கும்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிகளில் படிக்கிறார்கள். இந்த மாணவர்கள் மருத்துவம், பாரா மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படிக்கிறார்கள்.

engineering tamil nadu plus 2

இந்த ஆண்டும் மாநில பாடப்பிரிவு, மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் பலர் ஐஐடி, என்ஐடியில் படிப்பதற்கான ஜேஇஇ தேர்வுகளையும் எழுதியுள்ளனர். இன்னும் சிலர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

பயாலஜி பாடப்பிரிவை எடுக்காதவர்கள் விரும்புவது பொறியியலைதான். அதிலும் தற்போது Artificial Intelligence and Data Science, Artificial Intelligence and Machine Language, Cyber security உள்ளிட்ட படிப்புகளை படிக்கத்தான் மாணவர்கள் விரும்புகிறார்கள்.

பிளஸ் 2 மாணவர்கள் என்ன படிக்க வேண்டும், எந்த கல்லூரியில் சேர வேண்டும், எந்த கோர்ஸ் எடுக்க வேண்டும் என்பதெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டார், சொந்தக்காரர்கள், நண்பர்கள், தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் உள்ளிட்டோரின் விருப்பமாக இருக்குமே தவிர சம்பந்தப்பட்ட மாணவருக்கு இருக்காது.

இப்படிப்பட்ட நிலையில் மாணவர்களாகவே எதை படிக்க வேண்டும், எந்த கல்லூரி உள்ளிட்டவைகளை தேர்வு செய்ய தினேஷ் பிரபு எனும் career guidance நபர் அறிவுறுத்துகிறார்.

இவர் தனது யூடியூப் சேனலில் தமிழகத்தில் உள்ள டாப் 20 கல்லூரிகள் குறித்து தெரிவித்துள்ளார். அதாவது Artificial Intelligence and Data Science படிப்பு எந்த கல்லூரியில் நன்றாக சொல்லித் தரப்படுகிறது. எங்கு இதற்கென தனி ஆய்வுக் கூடங்கள் அமைந்துள்ளது, எங்கு லேப்கள் அமைக்கப்பட்டுள்ளது, எங்கெல்லாம் அதற்கான நிபுணர்களை கொண்டு சொல்லி கொடுக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் டாப் 20 பொறியியல் கல்லூரிகள் குறித்து பார்க்கலாம்.

1). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை

2). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

3). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை

4). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை

5). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

6). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

8). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

9). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

10). எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

11). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

12). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை

13). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

14). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

15). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

16). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

17). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

18). லயோலா ஐகேம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

19). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

20). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை

இவற்றில் அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கேம்பஸ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட கல்லூரிகளில் மெரிட் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்வாறு தினேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+