சென்னை மக்களே ஒரு நல்ல ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி சாப்பிடணும் ஆசையா? மிஸ் பண்ணாதீங்க! இதை படிங்க முதல்ல
சென்னை: ஒரு நல்ல ஆம்பூர் ஸ்டைல் பிரியாணியைச் சாப்பிட வேண்டும் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள். இதற்காகச் சென்னைவாசிகள் ஆம்பூர் வரை செல்ல தேவையில்லை, நகரிலேயே கிடைக்கும் பெஸ்ட் ஆம்பூர் ஸ்டைல் பிரியாணிகள் குறித்துப் பார்க்கலாம்.
பிரியாணி என்றால் இங்கே யாருக்குத் தான் பிடிக்காது. சுடசுட பிரியாணி ஒரு பிடி பிடித்தால் இருக்கும் எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் ஒன்றாகப் பிரியாணி இருந்து வருகிறது.

பிரியாணியில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு டேஸ்டை கொடுக்கும். தமிழ்நாட்டிலே ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி எனப் பல டைப்களில் பிரியாணி இருக்கிறது.
ஆம்பூர் பிரியாணி: அதிலும் குறிப்பாக ஆம்பூர் பிரியாணிக்குத் தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கவே செய்கிறார்கள். சென்னைக்கும் பெங்களூருவுக்கும் நடுவே அமைந்திருக்கும் ஆம்பூர் பகுதியில் தான் இந்த டைப் பிரியாணி ரொம்பவே பேமஸ்.. ஆற்காடு நவாப்களால் ஆண்ட ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு முக்கியமான நகரம் தான் இந்த ஆம்பூர். இப்போது உலகளவில் பிரபலமாகி வரும் இந்த ஆம்பூர் பிரியாணியின் கதை அங்கிருந்து தான் தொடங்குகிறது.
முதலில் ஆற்காடு நவாப்களின் சமையலறைகளில் தயாரிக்கப்பட்ட இந்த பிரியாணிகளுக்குத் தனிச்சுவை இருக்கவே செய்கிறது. ஆனால், சென்னைவாசிகளால் நல்ல ஆம்பூர் பிரியாணியைச் சாப்பிட ஒவ்வொரு முறையும் ஆம்பூர் வரை செல்ல முடியாது. அப்படியென்றால் சென்னையில் எந்தெந்த இடங்களில் சிறந்த ஆம்பூர் பிரியாணியைச் சாப்பிட முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சென்னை உணவகங்கள்: சென்னையில் ஆம்பூர் பிரியாணி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது இந்த ஆம்பூர் ஸ்டார் பிரியாணி தான். சென்னையில் ஆம்பூர் ஸ்டைல் பிரியாணியைச் சாப்பிட விரும்புவோர் செல்லும் முதல் இடமாக இதுவே இருக்கிறது. இங்கே மட்டன் பிரியாணி மிகவும் புகழ்பெற்றது. அதேநேர் கொஞ்சம் காரம் குறைவான உணவு வேண்டும் என்பவர்கள் இங்கே சிக்கன் பிரியாணியும் ட்ரை செய்யலாம். மேலும், இங்குக் கிடைக்கும் நண்டு லாலிபாப்பிற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
அதேபோல சென்னை அண்ணா நகரில் உள்ள 555 ஆம்பூர் பிரியாணியும் ரொம்பவே பேமஸ். குறைந்த விலையில் நல்ல ஒரு ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி சாப்பிட வேண்டும் என விரும்புவோருக்கு இதுதான் சரியான இடம். மேலும், உங்களால் அதிகம் சாப்பிட முடியாது என்றால் இங்கே குவாட்டர் பிளேட் வாங்கினால் போதும். நன்கு சாப்பிடும் நபர் என்றால் அரை பிளேட் பிரியாணி போதும் என்கிறார்கள். இத்துடன் லிவர் ஃப்ரை அல்லது லிவர் 65ஐ சாப்பிட்டால் அதுதான் பெஸ்ட் என்கிறார்கள்.
வேறு ஆப்ஷன்கள்: கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள சுபம் பிரியாணி கடையும் ஆம்பூர் ஸ்டைல் பிரியாணிக்காக டிரெண்டாகி வருகிறது. இங்கே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணிகள் சுவையாக இருக்கும். இவர்கள் பரிமாறும் முறையே அவ்வளவு அழகாக இருக்குமாம். எனவே, இந்தப் பக்கம் இருப்போர் நிச்சயம் இங்கே சாப்பிடலாம்.
இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் இடம் என்றால் அது ரஹ்மானியா ஹோட்டலில் கிடைக்கும் பிரியாணி தான். இந்த பக்காவான பிரியாணியைச் சாப்பிட நீங்கள் ஆம்பூருக்கே செல்ல வேண்டும். வேறு வழியில்லை. 130 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த பழமையான ரஹ்மானியா ஹோட்டல், கிட்டதட்ட ஆம்பூர் பிரியாணியின் கேபிடல் என்றே சொல்லலாம். ஆண்டுகள் கடந்தாலும் இங்குக் கிடைக்கும் பிரியாணிகளின் டேஸ்ட் மாறுவதில்லை.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications