10 பைசா முதலீடே இல்லாமல் புதிய தொழில் தொடங்குவது எப்படி தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதலீடு இல்லாமல் புதிய தொழிலை தொடங்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் என்ன மாதிரியான தொழில்களுக்கு முதலீடு இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் வெங்கடராமன் ராமசுப்ரமணியன் என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: முதலீடு என்பது பணத்தால் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.

அறிவு மற்றும் உடல் பலத்தை முதலீடாக கொண்டு பல்வேறு தொழில்கள் தொடங்கலாம். உதாரணமாக பின்வரும் தொழில்களை பார்ப்போம். இவற்றிற்கு தனியாக பணம் தேவையில்லை.
- இசை வகுப்பு நடத்துவது
- தேவை சார்ந்து கூப்பிடும், கால் டிரைவராக, சிற்றுந்து ஓட்டுனராவது
- அறிவியல், கணிதம் போன்ற அறிவு சார்ந்த டியூஷன் அதாவது கற்பிப்பு வகுப்புகள் நடத்துவது
- பிற மொழிகளான இந்தி, ஆங்கிலம் வகுப்புகள் நடத்துவது
- யோகா, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்துவது
- தோட்ட வேலைகள் செய்வது
- வீட்டு தரகராக வேலை செய்வது
- வாகனங்களை வீட்டிற்கு சென்று துடைக்கும் தொழிலை நடத்துவது
- வீடுகளைச் சுத்தம் செய்வது
- தனக்குள்ள திறமைகளைக் கொண்டு வகுப்புகள் நடத்துவது. உதாரணமாக பங்குச் சந்தை சார்ந்த வகுப்புகள்
குறைவான முதலீடுகளில் பல்வேறு தொழில்கள் உள்ளன.
- தையல் வேலை தொழில் செய்வது
- புத்தகம் எழுதுவது
- இசைக்கருவிகள் வகுப்புகள் நடத்துவது
- இருசக்கர வாகனத்தில் பொருட்களைச் சேர்ப்பிப்பது
- இருசக்கர வாகனத்தில் பயணச் சேவை வழங்குவது
- டீ சட்டைகளை வாங்கி அவற்றில் சிறிய அச்சுகள் அல்லது படங்கள் வரைந்து விற்பது
- கைவினைப் பொருட்களைச் செய்து இணையத்தில் விற்பது
- சிற்றுண்டி வகைகளைச் செய்து பொட்டலம் கட்டி விற்பது
- நிகழ்வுகளுக்கு புகைப்படங்கள் எடுத்துத் தருவது
நன்றி - marketing91.com
எவ்வாறு உங்களது தொழிலைத் தொடங்குவது?
- நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களுக்குள் உள்ள திறமையைக் கண்டு கொள்ளுங்கள். அதனைக் கொண்டு உங்களது தொழிலைத் திட்டமிடுங்கள். (Niche)
- சந்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.(Market research)
- சரியான இடத்தில் தொழிலைத் தொடங்குங்கள் (position)
- சரியானதொரு விலையை நிர்ணயுங்கள்(price)
- மற்றவர்களிடமிருந்து உங்களது தொழிலை வேறுபடுத்திக் காட்டுங்கள்(purple cow)
- விளம்பரப்படுத்துங்கள்(promotion).
- நல்லதொரு சேவை வழங்குங்கள்(product)
- மக்களுடன் நல்லதொரு தொடர்பை வைத்திருங்கள்(people)
- சிக்கனமாக தொழிலை நடத்தி பணத்தை சேமியுங்கள் (frugal)
- தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.(Expand)
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications