பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
சென்னை: பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், அந்த தொகுதியில் போட்டியிட உள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம்.
2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியான விறுவிறுப்புடன் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் மாற்றம் என களை கட்ட தொடங்கி உள்ளது.. அதிமுக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட பாமக திடீரென இன்று காலை பாஜக கூட்டணியில் இணைந்தது.

பாஜக மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் வந்தனர். இதில் அண்ணாமலை மற்றும் எல் முருகன் ஆகியோர் ராமதாஸின் காலில் விழுந்து ஆசிபெற்றனர் . தொடர்ந்து தொகுதி உடன்பாடு இறுதியான நிலையில் கையெழுத்தானது. இதன்படி 2024 லோக்சபா தேர்தலில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
இந்நிலையில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று உத்தேச பட்டியல் ஒன்றும் வெளியாகி உள்ளது. பாமக போட்டியிட உள்ளதாக கூறப்படும் 10 தொகுதிகள் பட்டியல்.. ஆனால் இந்த பட்டியலை பாமக அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை..
1.தர்மபுரி
2 கடலூர்
3.விழுப்புரம் (தனி)
4.சிதம்பரம் (தனி)
5.ஆரணி
6.அரக்கோணம்
7.ஸ்ரீபெரும்புத்தூர்
8 சேலம்
9. மத்திய சென்னை
10.தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி
தருமபுரி தொகுதியில் மருத்துவர் செந்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலம் தொகுதியில் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விழுப்புரம் தனி தொகுதியில் வடிவேல ராவணன், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கடலூரில் வழக்கறிஞர் பாலு, சிதம்பரத்தில் சங்கர் உள்ளிட்டோர் பாமக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் உள்ள 10 தொகதிகளில் 6 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள் தான் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. ஆனால் போட்டியிடும் தொகுதிகளோ அல்லது வேட்பாளர்கள் குறித்தோ அதிகாரப்பூர்வமாக பாமக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி











Click it and Unblock the Notifications