செம.. ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய ‛த்ரெட்ஸ்’.. பயன்படுத்துவது எப்படி? 10 வித்தியாசம் இதுதான்
சென்னை: ட்விட்டருக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா‛த்ரெட்ஸ்' எனும் செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. ட்விட்டர் போல் இருக்கும் இந்த செயலியை அதிகமானவர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ள நிலையில் ட்விட்டர் மற்றும் ‛த்ரெட்ஸ்' செயலிக்கும் இடையே 10 முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. அது என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் அன்றாட தேவைகள் அனைத்தையும் நாம் செயலி மூலம் பெறும் வசதி உள்ளது. உணவு ஆர்டர் முதல் ரயில், பஸ், விமான டிக்கெட் என அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முன்பதிவு செய்ய செல்போன் செயலிகள் உதவி வருகின்றன.

அதேபோல் பொழுதுபோக்கு உள்பட பிற விஷயங்களுக்கும் பல்வேறு செயலிகள் புதிது புதிதாக வருகின்றனர். இந்நிலையில் தான் உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் ட்விட்டர் செயலியை சமீபத்தில் எலான் மஸ்க் வாங்கினார். அன்று முதல் அவர் பல்வேறு மாற்றங்களை அதில் மேற்கொண்டு வருகின்றனர். இது ட்விட்டர் பயனாளர்களுக்கு பிடிக்காத நிலை உள்ளது.
ட்விட்டரில் மாற்றம்: அதாவது ட்விட்டரில் புளுடிக் பயன்பாட்டுக்கு மாதம் ரூ.900 கட்டணம் நிர்ணயம் செய்த எலான்மஸ்க், வரும் நாட்களில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பதிவுகளை பார்க்கும் வகையில் மாற்றம் செய்துள்ளார். அதன்படி ட்விட்டரில் வெரிபைட் பயனர்கள் தினமும் 10,000 பதிவுகளையும், வெரிபைட் இல்லாத பயனர்கள் 1000 பதிவுகளையும், புதியவர்கள் நாள் ஒன்றுக்கு 500 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். மேலும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல முறை உலகம் முழுவதும் அந்த செயலி முடங்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.
ட்விட்டர் மீது அதிருப்தி: எலான் மஸ்க்கின் இந்த மாற்றங்களால் ட்விட்டர் பயன்படுத்துவோர் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தியை சாதகமாக பயன்படுத்தும் வகையில் தான் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா புதிய செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. ‛த்ரெட்ஸ்' (Threads) எனும் பெயரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது த்ரெட்ஸ் செயலியையும் கொண்டு வந்துள்ளது.
‛த்ரெட்ஸ்' செயலி அறிமுகம்: இந்த செயலியை தற்போது அதிகமானவர்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ‛த்ரெட்ஸ்' செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் 7 மணிநேரத்தில் 10 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பேர் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த ‛த்ரெட்ஸ்' செயலியும் பார்க்க ட்விட்டர் போன்றே உள்ளது. ட்விட்டரை போன்று குறிப்பிட்ட செய்தி, வீடியோவை இந்த ‛த்ரெட்ஸ்' செயலியிலும் பகிர முடியும். உண்மையிலேயே ட்விட்டருக்கு சரியான போட்டியாக ‛த்ரெட்ஸ்' செயலி இருக்கும் என கூறப்படுகிறது.
10 வித்தியாசங்கள்: இதற்கிடையே தான் ட்விட்டரை காப்பியடித்து ‛த்ரெட்ஸ்' செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் கூட ட்விட்டருக்கும், புதிய வருகையான ‛த்ரெட்ஸ்' செயலிக்கும் 10 முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் வித்தியாசம்: இன்ஸ்டாகிராம் செயலியை அறிமுகம் செய்த மெட்ரா நிறுவனம் தான் த்ரெட்ஸ் செயலியை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளூடிக் பெற்றிருப்பவர்கள் அதனை அப்படியே த்ரெட்ஸ் செயலியிலும் பயன்படுத்த முடியும். ஆனால் ட்விட்டரில் ப்ளூடிக் பெற 8 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.900) செலுத்த வேண்டும்.
2வது வித்தியாசம்: ‛த்ரெட்ஸ்' செயலியை பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் ‛த்ரெட்ஸ்'செயலில் நேரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பயோவை பயனர்கள் பயன்படுத்த முடியும். அதோடு இன்ஸ்டகிராம் பக்கத்தில் நாம் பாலோ செய்யும் நபர்கள் ‛த்ரெட்ஸ்'செயலியில் இருந்தால் அவர்களையும் ஒரேயொரு கிளிக் மூலம் பின்தொடரும் வசதி இருக்கிறது.
3வது வித்தியாசம்: ட்விட்டரில் வெரிபைட் பயனாளர்கள் 25 ஆயிரம் எழுத்துகளிலும், வெரிபைட் இல்லாத பயனர்கள் 250 எழுத்துகளையும் பயன்படுத்தி ட்விட் செய்ய முடியும். ஆனால் ‛த்ரெட்ஸ்' பயன்படுத்தும் ஒருவர் 500 எழுத்துகளில் பதிவுகள் செய்ய முடியும். மேலும் ட்விட்டரை போல் கட்டணம் செலுத்தும் முறையை ‛த்ரெட்ஸ்' இன்னும் அறிமுகம் செய்யவில்லை. இதனால் அனைவரும் 500 எழுத்துகளில் மட்டுமே பதிவுகள் செய்ய முடியும்.
4வது வித்தியாசம்: ட்விட்டர் செயலில் ப்ளூடிக் இல்லாதவர்கள் 2.20 நிமிடங்கள் நீளம் கொண்ட வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் த்ரெட்ஸ் செயலில் பயனாளர்கள் 5 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5வது வித்தியாசம்: ட்விட்டர் செயலில் ஹோம்பேஜ் என்பது டிரெண்டிங்கில் உள்ள விபரங்களை நமக்கு காட்டும். ஆனால் த்ரெட்டுகளில் அத்தகைய வசதி தற்போது அறிமுகம் செய்யப்படவில்லை. இதனால் டிரெண்ட்டிங் டாப்பிக்கை நாம் ‛ஸ்குரோல்' செய்வதன் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும்.
6வது வித்தியாசம்: ட்விட்டரில் குறிப்பிட்ட பதிவை நாம் டிராப்ட்டில் சேமித்து கொள்ள வசதி இருக்கிறது. ஆனால் ‛த்ரெட்ஸ்' செயலில் அத்தகைய வசதி இல்லை. வரும்காலத்தில் இந்த வசதி மெட்ரா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
7 வது வித்தியாசம்: இன்ஸ்டாகிராம் பக்கத்தை போல் குறிப்பிட்ட ஐடிகளில் இருந்து யாருக்காவது தொல்லைகள் வந்தால் அதனை பிளாக் செய்யும் வசதி த்ரெட்ஸ் செயலிலும் உள்ளது. இது ட்விட்டரில் செயல்பாட்டில் உள்ளது.

8 வது வித்தியாசம்: ட்விட்டரில் விளம்பர பயன்பாடு உள்ளது. குறிப்பிட்ட பதிவுகளுக்க நடுவே விளம்பரங்கள் வருகின்றனர். ஆனால் த்ரெட்ஸ் செயலில் விளம்பர பயன்பாடு இல்லை. இதனால் பயனர்கள் இடையூறு இன்றி த்ரெட்ஸ் செயலியை பயன்படுத்த முடியும்.
9வது வித்தியாசம்: ட்விட்டர் செயலி என்பது தனிப்பட்ட முறையில் இயங்கி வருகிறது. ஆனால் த்ரெட்ஸ் என்பது இன்ஸ்டாகிராம் பக்கத்தோடு இணைந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் பயனாளர்களை த்ரெட்ஸ் பக்கம் திரும்பும் வகையில் இந்த வசதி நடைமுறையில் உள்ளது.
10வது வித்தியாசம்: த்ரெட்ஸ் செயலியின் நிறுவனமான மெட்டாவின் துணை தலைவர் கானர் ஹேய்ஸ் கூறுகையி்ல, ‛‛த்ரெட்ஸ் என்பது Activitypub சமூக நெட்வொர்க்கிங் நெறிமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமை போல் அல்லாமல் இந்த த்ரெட்ஸ் மூலம் ஒருவர் உலகம் முழுவதும் உள்ள நபர்களை தொடர்பு கொள்ள முடியும்'' என்றார். ட்விட்டரிலும் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications