முதல் ஆதார் கார்டை ஈஸியா புதுப்பிப்பது எப்படி? செப் 14தான் லாஸ்ட்! 15ம் தேதி முதல் எல்லாத்துக்கும் காசு!
சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை வீட்டிலிருந்தபடியே எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம். ஆதார் மையத்தில் போய் புதுப்பித்தால் ரூ 50 கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கால அவகாசம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ளன.
ஆதார் எனப்படும் மத்திய அரசின் அடையாள அட்டையை புதுப்பிக்க ஜூன் 14 ஆம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 14 ஆம் தேதியுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். அதாவது 2014ஆம் ஆண்டு ஆதாரை நீங்கள் எடுத்திருந்தால் இந்த புதுப்பிக்கும் பணி உங்களுக்கு பொருந்தும்.

உங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டை இருந்தால் அதை இதுவரை ஒரு முறை கூட புதுப்பிக்கவில்லை என்றால் அத்தகைய ஆதார் அட்டைகள் நிச்சயம் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக ஆதார் சேவை மையத்திற்கு சென்றால் ரூ 50 செலவு செய்ய வேண்டும்.
ஒரு பைசா செலவில்லாமல் எப்படி ஆதார் கார்டை புதுப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். அதிலும் UIDAI எனும் வெப்சைட்டில் போய் புதுப்பித்தால் இலவசம். அடையாள அட்டையாக பான் கார்டையும் முகவரிக்கு வாக்காளர் அட்டையையும் கொடுக்கலாம்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் போய் உங்கள் ஆதார் எண்ணுடன் உள்ளே செல்லவும், அப்போது நீங்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதை உள்ளீடு செய்து உள்ளே சென்றால் உங்கள் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக உள்ளதா என ஒரு முறை சரி பாருங்கள். ஒரு வேளை அதில் உள்ள உங்கள் சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் "என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன " என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு வேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அங்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். அதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள். உங்கள் அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள்.
அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருத்தல் வேண்டும். முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் 2 மெகா பைட்டைவிட குறைவாக இருத்தல் வேண்டும். அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்த வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இந்திய குடிமக்கள், மக்கள் தொகை குறித்த தகவல், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறியலாம். நீங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்துவிட்டால் அருகில் உள்ள ஆதார் மையம் பற்றிய தகவலை பெறலாம். பின்கோடு மூலம் அருகில் உள்ள ஆதார் மையத்தையும் நீங்கள் அறிய முடியும். அங்கு மேற்சொன்னதை போல் முகவரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை நேரில் கொண்டு போய் புதுப்பித்துக் கொள்ளலாம்.
உங்கள் ஆதார் கார்டில் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் தேவையான மாற்றங்களை இலவசமாக செய்து கொள்ளுங்கள். 15ஆம் தேதி முதல் எந்த சிறிய திருத்தத்திற்கும் ரூ 50 கொடுக்க வேண்டும்.
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications