ஆஹா.. சென்னையில் ஆரம்பிச்சிருச்சே .. உங்க வீட்டு கரண்ட் பில்லை பாதியாக குறைக்க ஈஸியான வழிகள் என்ன?
சென்னை: சென்னை உள்பட வடமாவட்டங்களில் இப்போதே வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் வெயில் உக்கிரமாக இருக்கும். இந்த சூழலில் இனி ஏசி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் உள்ளிட்டவற்றின் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகரிக்கும். இந்த சூழலில் உங்க வீட்டு கரண்ட் பில்லை பாதியாக குறைக்க ஈஸியான வழிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முன்பனி முடிந்து பின் பனி அடிக்கிறது பல ஊர்களில், ஆனால் சென்னையில் மட்டும் பேன் போடாமல் ஐந்து நிமிடம் கூட உட்கார முடியாத நிலை இருக்கிறது.. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இப்போதே வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது.. அடுத்த மாதத்தில் இருந்து ஏசி, பிரிட்ஜ் பயன்பாடு இப்போது உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால் கரண்ட் பில் இப்போது உள்ளதைவிட 3 மடங்கு வரை உயர வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே அரிசி விலை, காய்கறிகளின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. சிலண்டர் விலை, பெட்ரோல் விலையும் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்நிலையில் மின்கட்டணமும் கடுமையாக உயர்ந்தால் நிச்சயம் அது பாராமாக மாறும். இஎம்ஐ, லோன்,வீட்டு வாடகை என வாழும் மக்கள் மின் கட்டணத்தை சில எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் குறைக்க முடியும். அதனை இப்போது பார்ப்போம்.
உங்கள் வீட்டில் டியூப் லைட்கள் அதிக அளவில் உள்ளது என்றால், அதனை எல்லாம் உடனே மாற்றுங்கள். டியூப்லைட்டுக்கு பதிலாக எல்இடி பல்புகளை வாங்கி அனைத்து அறைகளிலும் பயன்படுத்துங்கள். 2 வாட்ஸ் முதல் 40 வாட்ஸ் வரை திறன் கொண்ட எல்இடி பல்புகள் சந்தையில் கிடைக்கின்றன. 15 வாட்ஸ் எல்இடி பல்புகளே பெரும்பாலும் போதும் என்பதால் அறைகளில் தேவையான அளவிற்கு பல்புகளை பொறுத்துவதன் மூலம் உங்களால் வீட்டின் மின்சார கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும்.
அதேபோல் உங்கள் வீட்டில் பழைய காலத்து மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருந்தால் அவற்றை உடனடியாக மாற்றி விடுங்கள். பழைய காலத்து மின்விசிரிகள் 100 முதல் 140 வாட்ஸ் திறன் கொண்டவை. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பமான BLDS மின்விசிறிகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த BLDS மின்விசிறிகள் 40 வாட்ஸ் வரை திறன் கொண்டவை. இவை மின்சார பயன்பாட்டை குறைப்பதால் உங்கள் வீட்டின் மின்சார கட்டணம் கணிசமாக குறையும்.
அதேபோல் ஏசியில் மின் கட்டணம் குறைய வேண்டும் என்று நினைத்ததால் இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் வழக்கமான விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசி இருந்தால், அதற்கு பதில் இன்வெர்ட்டர் ஏசியை பொருத்தலாம். இதன் மூலம் உங்கள் வீட்டின் மின்சார கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும்.
இதேபோல் சிலர் அடிக்கடி பிரிட்ஜை திறந்து மூடுவார்கள்.. அப்படி செய்ய வேண்டாம். அதேபோல் தேவையற்ற நேரங்களில் பல்புகளை எரிய விட வேண்டாம்.. மிக்சியை போட்டால் கையோடு ஆப் செய்துவிடுங்கள். அதை ஆனிலேயே வைக்க வேண்டாம். பேன் மற்றும் ஏசி பயன்பாட்டை குறைக்க கதவுகள் ஜன்னல்களை பகல் நேரத்தில் திறந்து வைக்கலாம். ஏசியை மிகவும் குறைவான வெப்பநிலைக்கு வைக்க வேண்டாம். ஏசியில் 24 அல்லது 25 என்கிற அறை வெப்பநிலைக்கு வந்தால் மின்சாரம் அதிகம் செலவாகாது. எனவே இதை முயற்சித்து பாருங்கள்.. அதேபோல் ஒவ்வொருவரும் ஒரே அறையில் அமர்ந்து கொண்டு இருப்பதைவிட, ஒரே அறையில் நேரத்தை செலவிட்டால் மின்சாரம் சிக்கனமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications