Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானத்தில் தப்பி தவறி கூட எடுத்து செல்ல கூடாத 8 பொருட்கள்.. உடனே தூக்கி தூர போடுங்க.. பெரிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த காலத்தில் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், நம்மில் பலருக்கும் விமானத்தில் எதை எடுத்துச் செல்லலாம், எதை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிகள் தெரிவதில்லை. இதனால் ஏர்போர்ட்களில் செக்யூரிட்டி செக்களில் நாம் தேவையே இல்லாமல் சிக்கிக் கொள்கிறோம். இந்திய விமானங்களில் நிச்சயமாக எடுத்துச் செல்லவே கூடாது 8 விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகவே இருக்கும். இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை நீங்கள் எடுத்துச் செல்ல முயன்றால், தெரியாமல் எடுத்துச் சென்றாலும் கூட, நீங்கள் சிக்கலில் மாட்டலாம். அதுபோல விமானத்தில் நிச்சயம் தவிர்க்க வேண்டிய பொருட்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

What are the Eight major things to avoid whiling Packing for vacation on Indian flight travel

கூர்மையான பொருட்கள்

1. எந்த வகையான கூர்மையான பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. கத்திகள், கத்தரிக்கோல், பிளேடுகளை தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன் நகவெட்டி கூட கூர்மையான பொருட்கள் வகையின் கீழ் வருகின்றன. எனவே, அதைக் கையில் (cabin baggage) எடுத்துச் செல்ல முடியாது. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளையும் பாதுகாப்பு ஊழியர்கள் ஆயுதமாகக் கருதுவார்கள். நீங்கள் அழகுசாதனப் பொருட்களை எடுத்துச் சென்றாலும், அதில் கூர்மையான பொருட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூர்மையான பொருட்கள் checked luggageல் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

2. 100 மில்லிக்கு மேல் உள்ள திரவங்கள்: ஹேண்ட் லக்கேஜ் ஆகத் திரவப் பொருட்களை எடுத்துச் செல்வதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஷாம்பு, சாஸ், ஊறுகாய் அல்லது வாசனைத் திரவியம் என எதுவாக இருந்தாலும், 100 மில்லிக்கு கீழ் மட்டுமே அனுமதி. அதற்கு மேல் இருந்தால் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.. அது சீல் செய்யப்பட்டிருந்தாலும் கூட அனுமதிக்க மாட்டார்கள். 100 மில்லிக்கும் குறைவான பாட்டில் மட்டுமே அனுமதிக்கப்படும்

சிகரெட் பழக்கம் இருக்கா?

3. லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள்: உங்கள் ஹேண்ட் லக்கேஜில் ஒரே ஒரு லைட்டர் அல்லது தீப்பெட்டி இருந்தாலும் உங்களைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள். இவை தீ ஆபத்தான பொருட்களாகக் கருதப்படும். இவை ஹேண்ட் லக்கேஜில் அனுமதிக்கப்படாது. புகைபிடிப்பவர்கள் லைட்டர்களை பாக்கெட்டில் போடுவதைப் பழக்கமாக வைத்திருப்பார்கள். எனவே, விமானத்தில் ஏறும்போது இதைக் கவனமாக செக் செய்து கொள்ளுங்கள்

4. பவர் பேங்குகள்: எது பவர் பேங்க் கூட கட்டுப்பாடு இருக்கா எனக் கேட்கலாம். ஆம், அதில் பேட்டரி இருப்பதால் கட்டுப்பாடுகள் உள்ளன. பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜாக போட முடியாது. ஹேண்ட் லக்கேஜாக மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதற்கும் கூட ஒரு வரம்பு உள்ளது. 160 வாட்-ஹவருக்கு மேல் உள்ள எந்தப் பவர் பேங்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் இதில் மிகவும் கண்டிப்பாக உள்ளன. அதிக வாட்-ஹவர் கொண்ட பவர் பேங்கை எடுத்துச் சென்றால், அவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்படலாம். எனவே, இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

கவனம் தேவை

5. டூல்ஸ் மற்றும் உபகரணங்கள்: சுத்தியல், ஸ்க்ரூடிரைவர் ஆகியவை கூட ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை அவையும் ஹேண்ட் பேக்கேஜில் செய்யப்பட்டுள்ளன. அவை பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்படலாம். எனவே, இதை உங்கள் லக்கேஜில் மொத்தமாகவே தவிர்த்துவிடுவது நல்லது.. மிகவும் அத்தியாவசியம் என்றால் செக்-இன் பேக்கில் எடுத்துச் செல்லலாம்.

6. கிரிக்கெட் பேட்கள், ஹாக்கி ஸ்டிக்குகள், டென்னிஸ் பேட்கள், ஸ்கிப்பிங் கயிறுகள் போன்றவை உங்கள் ஹேண்ட் பேக்கில் இருந்தாலும் நீங்கள் சிக்கலில் மாட்டுவீர்கள். இவை விளையாட்டு அல்லது உடற்பயிற்சி உபகரணங்களாகத் தோன்றினாலும், இவை பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே கருதப்படும். எனவே, இதையும் சென்-இன் லக்கேஜாக எடுத்துச் செல்வதே சரியாக இருக்கும்.

கூடவே கூடாது

7. எலக்ட்ரானிக் சிகரெட்டுகள்: எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. எனவே, இந்தியாவில் உள்ள எந்தவொரு ஏர்போர்ட்டாக இருந்தாலும் சரி, அதில் ஹேண்ட் லக்கேஜ், செக்-இன் லக்கேஜ் என எதிலும் உங்களால் இதை எடுத்துச் செல்ல முடியாது. உங்கள் லக்கேஜில் இவை இருந்தால் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதமும் விதிக்கப்படும் என்பதால் கவனம்.

8. ஸ்ப்ரேக்கள்: சென்ட் ஸ்ப்ரே, அதாவது பெரிய deodorant ஸ்ப்ரேக்கள், ஹேர் ஸ்ப்ரேக்கள் போன்ற அழுத்தம் கொண்ட கேன்களை ஹேண்ட் லக்கேஜில் அனுமதிக்கப்படாது. விமானத்தில் காற்றழுத்தம் மாறுபடும் என்பதால் இவை அபாயகரமான பொருட்களாகக் கருதப்படுகின்றன. 100 மில்லி அளவிலான சிறிய ஸ்ப்ரேக்கள் அனுமதிக்கப்படலாம். ஆனால் பெரிய கேன்களுக்கு அனுமதி இல்லை.

உங்கள் டிரிப்பிற்கு கிளம்புவதற்கு முன்பு இந்த பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் விமான நிலையத்திலேயே தலைவலி ஆரம்பித்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+