டெக்னாலஜி களஞ்சியமாக மாறிய திமுக புதிய வெப்சைட்! - லைவ் ரிப்போர்ட்
சென்னை: புதுப்பொலிவு பெற்றிருக்கிறது திமுகவின் இணையதளம். கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட இருந்த இணையதளம், ஒடிசா ரயில் விபத்து காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.
அதன்பிறகு இப்போது மறுபடியும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? பழைய தளத்திற்கும் புதியதுக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம், இணையப் பகுதியைப் போய் மேய்ந்து பார்த்தோம்.

இணையத்தின் முதல் பகுதியில் 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே' என்ற வாசகத்துடன் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி புன்னகைத்துக் கொண்டிருக்கிறார். அவரைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுட்டிக் காட்டும் படி, 'உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு' என்ற வாசகத்துடன் அவர் கையசைத்தபடி நிற்கிறார்.
இந்தப் புதிய தளத்தில் கட்சி உறுப்பினராக இணைவதற்குத் தனியாக ஒரு சொடுக்கித் தந்துள்ளார்கள். அதை க்ளிக் செய்தால் ,https://www.udanpirappu.com/ பக்கத்திற்குச் சென்று ஒரு டிஜிட்டல் படிவம் வருகிறது. அதில் நமது வாக்காளர் எண்ணை நிரப்பினால், அடுத்தடுத்து சில பக்கங்கள் வருகின்றன. அதில் தென்படும் அனைத்தையும் நிரப்பினால், அதிகாரப்பூர்வமான உறுப்பினராக ஆனதற்குச் சான்றும் கிடைக்கிறது.
இந்தப் பகுதியில் இருமொழி வடிவில் படிவங்கள் தரப்பட்டுள்ளன. தங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து யாரும் உறுப்பினராக ஆகலாம். இதே பகுதியில் திமுக சமூகநீதி, கல்வி உரிமை,சமத்துவம், மாநில உரிமை எனப் பல வகைகளில் பங்களிப்பு செய்த சாதனைகள் பட்டியல் போடப்பட்டுள்ளன. அதை ஸ்லைடு போல் மாற்றி மாற்றிக் காட்டுவதைப் போன்று வடிவமைத்திருக்கிறார்கள்.

திமுகவின் https://www.dmk.in/ தளத்தின் முகப்பு பகுதியில் 'அண்மை நிகழ்வுகள்', 'திராவிட மாடல்', 'காலவரிசை' , 'சாதனைகள்' எனத் தனித்தனியான பக்கங்கள் பட்டியல் போடப்பட்டுள்ளன.
மேலும் இப்போது புதியதாக முதல்வர் ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கம், ட்விட்டர் பக்கம், இன்ஸ்ட்ராகிராம் பக்கம், யூடியூப் பக்கம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொட்டால், உரிய லிங்க் கிடைக்கிறது. இந்தப் பகுதியில் மு.க.ஸ்டாலினுக்குத் தனிப்பக்கமும் அறிவாலயத்திற்கு என்று தனிப் பக்கமும் என இரண்டு சுட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகள் நவீன காலத்தின் அடையாளமாகவே இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணையத்தளத்திற்கு வந்தால் மட்டும்போதும், வேறு வேறு தனித்தனியாகப் பக்கங்களைப் போய் தேடிப்பார்க்காமல், ஒரே இடத்தில் அனைத்து சமூக ஊடகப் பக்கங்களையும் பார்க்க முடிகிறது. இதனால், ஒருவர், அதிக நேரம் இணையத்தில் தனது நேரத்தைச் செலவிடும்படி மாற்றப்பட்டுள்ளது.
முகப்பில் உள்ள மற்றொரு சுட்டியில் 'கழகம்' என்ற அட்டவணை உள்ளது. அதனை க்ளிக் செய்தால், 2 கோடி கழக உறுப்பினர்கள் இலக்கு என்ற தகவல் கிடைக்கிறது. திமுகவில் ஆக மொத்தமாக, இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி என 23 சார்பு அணிகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 125 சட்டமன்ற உறுப்பினர்களும் 20 மக்களவை உறுப்பினர்களும் 10 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளதாகத் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

'கழகம்' அட்டவணையின் கீழ், 'கொள்கை', 'வரலாறு', 'கழக அமைப்பு', 'மக்கள் பிரதிநிதிகள்' எனப் பட்டியல் இடப்பட்டுள்ளன. இதில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பக்கத்தை க்ளிக் செய்தால், அமைச்சர்கள் பட்டியல் துறைவாரியாகப் புகைப்படங்களுடன் பார்வைக்குக் கிடைக்கிறது.
'வரலாறு' என்பதை க்ளிக் செய்தால் 1916இல் நீதிக்கட்சி தொடங்கியது முதல் மு.க. ஸ்டாலின் வரையான வரலாற்று ரீதியான குறிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியைக் கொண்டு ஒருவர் தனக்கு திமுக தொடர்பான அனைத்து தகவைகளையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

'சாதனைகள்' என்பதனை க்ளிக் செய்தால், என்ன வரும் எனத் தனியே எழுதத் தேவையில்லை. திமுக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திய கை ரிக்ஷா ஒழிப்பில் தொடங்கி இன்றைய முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ள புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் சின்ன சின்ன கட்டுரைகள் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, 'வெளியீடுகள்' எனத் தனிப் பகுதி உள்ளது. அதில் கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அறியும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி தொடர்பாக பல்வேறு பத்திரிகைகளில் வந்துள்ள கட்டுரைகளையும் இங்கே இணைத்துள்ளனர்.
அடுத்து கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி'யை இந்தத் தளத்திலிருந்தே படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இ பேப்பராகவும் படிக்கலாம்.

'முத்தமிழறிஞர் கலைஞர்' என்ற பகுதியைக் க்ளிக் செய்தால் 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே!' எனக் கருணாநிதியின் குரல் பதிவு ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து, 'வா வா தலைவா' என்ற பாடல் ஒன்று ஒலிக்கிறது. அதுவும் இளைஞர்கள் விரும்பும் மெட்டில் அது அமைக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் ஏவி.எம்.சரவணன் தொடங்கி நக்கீரன் கோபால், அ.ராசா எனப் பலர் கருணாநிதியைப் பற்றி தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள வீடியோ பதிவுகள் அடுக்கடுக்காக உள்ளன. மேலும் 1924ஆம் ஆண்டு கருணாநிதியின் பிறப்பு தொடங்கி, அவரது இறுதிக் காலம் வரை ஆண்டு வரிசையில் அவரது சாதனைகள் பட்டியல் போட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இணையத் தளத்தில் முகப்பு பக்கத்திலேயே திமுக இந்த 2 ஆண்டுகளில் கொண்டுவந்த திட்டங்கள் குறித்த தனி வீடியோ பதிவுகளும் அதனால் பலன்பெற்றவர்களின் அனுபவ பதிவும் தொகுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மேலும் அதிக நம்பகத் தன்மையான தரவுகள் மக்களுக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
'பூம்புகார்' படத்தில் கருணாநிதி சால்வை போர்த்தியபடி பேசும் ஆரம்ப வசனக் காட்சி காணொளியாகக் கிடைக்கிறது. கலைஞருடன் ஒருநாள் என்ற ஒரு வீடியோ பதிவும் இருக்கிறது.
ஆக, மொத்தம் இந்தப் புதிய தளம் எழுத்து ரீதியான ஆவணங்களைக் கடந்து டிஜிட்டல் பதிவுகள் மற்றும் வீடியோ ஆகிய வடிவங்களில் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வரலாற்றைப் பார்த்துக் கொண்டே தமிழ்நாட்டின் வரலாற்றையும் வருங்கால இளைஞர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications