கோடீஸ்வரன் ஆகனுமா.. "இந்த ஐந்தும் ரொம்பவே முக்கியம்.." சின்ன முதலீடு செய்தால் போதும்! அது எப்படி
சென்னை: கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்குமே இருக்கும். ஆனால், அப்படி பெரும் பணக்காரனாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர் விளக்கியுள்ளார் இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் பெரும்பாலான அரசுப் பணிகளிலேயே ஓய்வூதியம் என்பது இல்லாமல் போய்விட்டது. இதனால் ஓய்வுக்குப் பிறகு காலத்தில் நமக்குத் தேவையான பணத்தை நாமே ரெடி செய்ய வேண்டியது கட்டாயம்.

பணத்தைச் சேமிப்பது எப்படி: இதனால் பணத்தைச் சேமிப்பதும் சரியாக முதலீடு செய்வதும் ரொம்பவே முக்கியமானதாக மாறுகிறது. பணத்தைச் சேமிக்க அனைவருக்கும் விருப்பம் என்றாலும் அதை அனைவராலும் எளிதாகச் செய்ய முடிவதில்லை. இதற்கிடையே நீண்ட கால முதலீடு ஏன் நல்லது.. அதற்குத் தேவை என்பதைப் பொருளாதார வல்லுநர் கே ரஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
இந்த 5 முக்கியம்: இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் , "இவை அனைத்தும் சாத்தியமே. எப்படி? உங்களுக்குத் தேவை... 1️ நம்பிக்கை,.. 2️ சேமித்த சிறிது பணம், 3️ Discipline - நான் முதலீடு செய்வதை நிறுத்த மாட்டேன். 4️ Patience - நான் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்கிறேன். அந்த முதலீடு வளரும்வரை பொறுமையுடன் காத்திருப்பேன். 5️ Consistency - நீண்ட காலத்திற்கு மாதம் தவறாமல் முதலீடு செய்வேன்.
நம்புங்கள்... உங்களை, உங்களது சேமிப்பை, உங்களது முதலீட்டை. நீண்ட கால முதலீடுகளில், சந்தையானது உங்களை எப்போதும் கைவிடாது" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், நீண்ட காலம் முதலீடு செய்தால் எந்தளவுக்குப் பலன் கிடைக்கும் என்பதை விளக்கும் வகையிலான போட்டோவையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சின்ன முதலீடு பெரிய லாபம்: ஆண்டுக்கு 12% ரிட்டர்ன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் ஒரு கோடி ரூபாயைச் சேமிக்க வேண்டும் என்பதே இலக்கு என வைத்துக்கொள்வோம். இதை நீங்கள் 10 ஆண்டுகளில் சேமிக்க வேண்டும் என்றால் நீங்கள் மாதம் 43,500 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். அதே 15 ஆண்டுகளில் சேமிக்க வேண்டும் என்றால் 20 ஆயிரம் முதலீடு செய்தால் போதும்.
இப்படி ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க முதலீடு தொகை கணிசமாகக் குறைகிறது. நீங்கள் 30 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயைச் சேமிக்க வேண்டும் என்றால் 3000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்.
பெரிய தொகை: இப்படி தான் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சரி நீண்ட காலம் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகை குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் 10 கோடி ரூபாயைச் சேமிக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். 10 கோடி என்பது ரொம்பவே பெரிய தொகை. ஆனால், இதையும் கூட நீங்கள் நீண்ட காலம் சேமித்தால் எளிதாக அடையலாம். அதாவது மாதம் 28,500 ரூபாய் சேமித்தால் போதும்.. மிக எளிதாக 10 கோடி ரூபாயை அடைய முடியும்.
திட்டம் இதுதான்: நீண்ட கால முதலீட்டில் இருக்கும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் இதுதான். அதாவது ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க முதலீடு செய்ய வேண்டிய தொகை கணிசமாகக் குறையும், சிறிய தொகை முதலீடு செய்தால் அது வட்டி போடும். அந்த வட்டிக்கு வட்டி வரும். இப்படிச் சென்று நீண்ட காலத்தில் அது மிகப் பெரிய தொகையாக மாறும். ஆங்கிலத்தில் இதை snowball effect என்பார்கள்,
அதாவது மலையின் உச்சியில் நீங்கள் சிறிய பனி பந்தைப் போட்டால் போதும். அது கீழே வரும் போது சுற்றி இருக்கும் பனியை எல்லாம் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பெரிதாகும். அது எந்தளவுக்கு நீண்ட தூரம் செல்கிறதோ.. அந்தளவுக்கு அந்த பனி பந்தும் பெரியதாக மாறும். முதலீடும் அதேபோலத் தான் நீங்கள் எவ்வளவு காலம் விடுகிறீர்களோ.. அவ்வளவு காலம் நமக்கு நல்லது. பெரிய லாபம் கிடைக்கும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications