இல்லத்தரசிகளே இத மட்டும் மறக்காதீங்க.. பல மடங்கு சேமிக்கலாம்.. 6ஆவது பாயிண்ட் ரொம்ப முக்கியம்!
சென்னை: குடும்பத்திற்கான செலவுகளை நிர்வகிக்கும் இல்லத்தரசிகள் என்ன செய்தால் மிகப் பெரியளவில் சேமிப்பை அதிகரிக்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
குடும்பத்திற்கான பட்ஜெட்டை போட்டு, வரவு செலவுகளைச் சரியாக நிர்வகிப்பது என்பதைக் கணவன் மனைவி என இருவரும் செய்ய வேண்டியது.

இருந்த போதிலும் இப்போது பெரும்பாலான குடும்பங்களில் பட்ஜெட்டை போடுவது என்பது பெண்களின் வேலையாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளாக இருந்தால் இதுவே அவர்களின் முக்கிய வேலையாக இருக்கிறது.
முக்கியம்: வரவு செலவைச் சரியாக நிர்வகித்தால் மட்டுமே குடும்பத்தைத் திறம்பட நடத்த முடியும். மேலும், இல்லத்தரசிகளால் இங்கே தான் பணத்தை தங்களுக்கு எனச் சேமிக்கவும் முடியும். ஏனென்றால் இல்லத்தரசிகள் பெரும்பாலும் அவர்கள் கணவனையே பொருளாதார ரீதியாகச் சார்ந்து இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது குடும்ப பட்ஜெட்டை திறம்படப் போட்டு, அதில் பணத்தைச் சேமிக்க முடிந்தால் அது அவர்களுக்கு மிகப் பெரியளவில் உதவும். அப்படி இல்லத்தரசிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பட்ஜெட்: உங்கள் மாத வருமானம் மற்றும் செலவுகளைக் காட்டும் தெளிவான பட்ஜெட்டை உருவாக்குங்கள்.. கட்ட வேண்டிய பில்கள், மளிகை பொருட்கள், போக்குவரத்து, வெளியே செல்லும் போது ஆகும் செலவுகள் என அனைத்தையும் பட்டியலிட்டு அந்த பட்ஜெட்டிற்குள் செலவு செய்யுங்கள். பட்ஜெட் போடுவது மட்டுமே நிதி நிலைமை குறித்த விரிவான பார்வையை நமக்குத் தரும். எங்கே செலவுகளைக் குறைக்கலாம் என்பதையும் அறிய உதவும்.
திட்டமிடல்: அதேபோல அந்த வாரம் என்ன சமைக்கப் போகிறோம் என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். இப்படி உணவை முன்கூட்டியே திட்டமிடுவது மளிகை பொருட்களில் பணத்தைச் சேமிக்க மிகப் பெரியளவில் உதவும். அந்த வாரம் என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து அதையே பின்பற்றுங்கள். ஷாப்பிங் செல்லும் போது பொருட்களை மொத்தமாக வாங்குகள். அது நேரத்தை மட்டுமின்றி பணத்தையும் மிச்சப்படுத்தும்.
ஆப்பர்கள்: மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை வாங்கும்போது கூப்பன்கள், தள்ளுபடி, கேஷ்பேக் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது பெரிய ஸ்டோர்கள், ஆன்லைன் தளங்கள் என அனைத்தும் ஆப்பர்களை வழங்குகிறது. ஒரு ஐந்து நிமிடம் கூடுதலாகத் தேடினால் இந்த ஆப்பர்கள் குறித்து நமக்குத் தெரிந்துவிடும். எனவே, அதை மிஸ் செய்யாமல் பயன்படுத்துங்கள்.
மின்சார கட்டணம்: அதேபோல நாம் அதிகம் மிச்சப்படுத்தக் கூடிய மற்றொரு முக்கிய இடம் மின்சார கட்டணம். தேவையில்லாமல் ஓடும் மின்சாதனங்களை ஆப் செய்து வைக்கவும். மின் கட்டணத்தைக் குறிப்பிட்ட யூனிட்கள்களுக்குள் வைத்துக் கொண்டால் மிகப் பெரிய தொகையை நம்மால் சேமிக்க முடியும். எனவே, அதைக் கவனமாக நோட் செய்து பின்பற்றுங்கள்.
சிறு சிறு பணிகள்: சிறு சிறு ரிப்பேர் பணிகளைச் செய்ய கற்றுக் கொள்ளலாம். அவை தேவையில்லாத செலவுகளைக் குறைக்கும். மேலும், புதிய பொருட்களை வாங்குவதற்குப் பதிலாகப் பல விஷயங்களில் செகண்ட் ஹேண்ட் பொருட்களை வாங்கலாம். இப்போது பல துறைகளில் செகண்ட் சந்தையில் நமக்குத் தரமான பொருட்களே கிடைக்கிறது. எனவே, இதன் மூலமும் கணிசமான தொகையை நாம் மிச்சப்படுத்தலாம்.
அவசர நிதி: அவசர நிதியை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். அது எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க உதவும். மருத்துவக் கட்டணம், வீடுகளை ரிப்பேர் செய்வது, போன்ற எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க அது மிகப் பெரியளவில் உதவும். அவசரக் காலங்களில் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவது, கிரெட்டிட் கார்டு லோன் வாங்கி மாட்டுவது உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து இது நம்மை காப்பாற்றும்.












Click it and Unblock the Notifications