"சைவம் ஒன்லி.." விஜய் நிகழ்ச்சியில் ரெடியாகும் கமகம விருந்து! என்னென்ன ஐட்டங்கள் தெரியுமா?
சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று மார்க் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவுகள் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேர்வ நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 வரை நடந்தது. அதில் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

அதேபோல பிளஸ் 2 மாணவர்களுக்குக் கடந்த மார்ச் 1ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், அது மார்ச் 22 வரை நடைபெற்றது. இதில் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
பொது தேர்வு: பொதுத் தேர்வைத் தொடர்ந்து விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தீவரமாக நடைபெற்றது. தொடர்ந்து கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.56 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், 10ஆம் வகுப்பில் 91.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்வில் அதிக மார்க் பெற்றவர்களுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சூழலில் தான் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை விஜய் இன்று வழங்குகிறார்.. பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இந்த விருதும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் விஜய் மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சி: கடந்தாண்டும் விஜய் இதேபோல விருதை வழங்கி இருந்தார். கடந்தாண்டு சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த நிகழ்ச்சியில் விஜய் அனைவருக்கும் பொறுமையாக மேடையில் நின்றபடி விருது வழங்கினார்.. பல மணி நேரம் நடந்த அந்த நிகழ்வில் சுமார் 1,500 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நள்ளிரவில் தான் அந்த நிகழ்ச்சியே முடிந்தது.
இதற்கிடையே இந்தாண்டும் அதேபோல விஜய் மாணவ மாணவிகளுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகையை வழங்குகிறார். இதற்கான விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இப்போது கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்..
விஜய்: முதற்கட்டமாக இன்று நடக்கும் நிகழ்ச்சியில் இன்று சுமார் 800 அதிகமான மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. கடந்த பிப். மாதம் தான் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருந்தார். அதன் பிறகு விஜய் மேடை ஏறுவது இதுவே முதல்முறையாகும்.
ரெடியாகும் உணவு: இதற்கிடையே இப்படிக் கலக்கலாக ரெடியாகும் இந்த இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க சைவ சாப்பாடு மட்டுமே மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
வடை அப்பளம், அவியல் உடன் சேர்த்து ஸ்வீட்டிற்கு வெற்றிலை பாயாசம் மெனுவில் இருக்கிறது. மேலும், சாதம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, பக்கோடா, ஆகியவையும் இந்த மெனுவில் இருக்கிறது. அத்துடன் சேர்ந்து அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் என 15 வகையான உணவுகள் மதிய உணவுக்குத் தயாராகி வருகின்றன.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications