Disasters: இயற்கை எழில் கொஞ்சும் அழகும்.. பேராபத்தும்! நேபாளத்தை இதுவரை உலுக்கிய பேரிடர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை எழில் கொஞ்சும் தேசம் நேபாளம். அழகுடன் ஆபத்தும் மிக்க நாடாக உள்ள நேபாளம் மழை வெள்ளம், நிலச்சரிவுகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. நேபாளம் சமீபத்திய ஆண்டுகளில் சந்தித்த இயற்கை பேரிடர்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் இந்த நாடு, எங்கு பார்த்தாலும் மலை முகடுகளும் பச்சைப் பசேல் இயற்கை காட்சிகளும் என கண்களுக்கு விருந்தளிக்கும்.

Disasters

நேபாள பெருவெள்ளம்

அழகு என்றாலே ஆபத்து தானே என்ற சொல்லாடலை நிரூபிக்கும் வகையில், நேபாளத்தில் இயற்கை பேரிடர்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மொத்த உலகத்தையே அதிர வைத்துள்ளது. நேபாள வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடர்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

1934 நிலநடுக்கம்

நேபாத்தில் கடந்த 1934 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.6, 8.3 என்ற அளவில் பயங்கர நிலாண்டுக்கம் ஏற்பட்டது. ஒக்லதுங்கா என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கிழக்கு நேபாளத்தில் பெரும் பாதிப்பு ஏற்படது. மண் வீடுகள் அடியோடு தரைமட்டம் ஆகின. 8,159 மக்கள் உயிரிழந்தனர்.

1988 நிலநடுக்கம்:

கடந்த 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி நேபாள - இந்தியா எல்லையில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 1,003 பேர் கொல்லப்பட்டனர். 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.

2014 எவரெஸ்ட் பனிச்சரிவு

2014, ஏப்ரல் 18ல் இமயமலையில் உள்ள கும்பு பனிச்சரிவின் ஒரு பெரும் பகுதி சரிந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்குக் கீழே இருந்த முகாம்கள் பனிச்சரிவில் சூறையாடப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

2015 நிலநடுக்கம்

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அடுத்து 7.3 என்ற அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பின் அதிர்வுகளால் மேலும் 218 பேர் கொல்லப்பட்டனர்.

2019 மற்றும் 2020 பருவமழை பேரழிவுகள்:

நேபாளத்தில் ஜூலை 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் 78 பேர் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர். 17,500 பேர் தங்கள் இருப்பிடத்தை இழந்து வெளியேறினர்.

2025 வெள்ளம், நிலச்சரிவு:

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நேபாளத்தின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 44 பேர் பலியாகினர். இலம் பகுதியில் மட்டும் 37 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+