பாம்பு மரகதக் கல்லை கக்குமா? தீண்டியவர் இறந்தாரா என சுடுக்காட்டில் கொம்பேறி மூக்கன் செக் செய்யுமா?
சென்னை: பாம்பு மரகதக் கல்லை கக்குமா? பாம்பு பால் குடிக்குமா, சுடுகாட்டில் கொம்பேறி மூக்கன் காத்திருக்குமா உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் குறித்து காண்போம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் செல்வன் ரத்தினசாமி என்பவர் கூறியிருப்பதாவது: பாம்பு மரகதக் கல்லினை கக்கும் என்று சொல்லப்படுவதற்கு பின்னால் உள்ள உண்மைகள் எவை?

சென்னை கிண்டி பாம்பு பண்ணையை ஆரம்பித்து ரோமுலஸ் விட்டேகர் எழுதிய புத்தகம் இந்திய பாம்புகள். நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவின் வெளியீடு அதில் பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகள் ஒரு இரண்டு பக்கத்திற்கு எழுதியிருக்கிறார்
அவர் சொல்கிறார்,
"1.பாம்பை பிடிக்கும் தொழிலை செய்யும் இருளர்கள் நமக்குத் தெரியும். பாம்பு தலையில் நாகமணி இருக்கிறது என்ற கூற்றுக்கு இருளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?அப்படி இருந்தால் நாங்கள் பாம்பு பிடித்து பிழைக்கும் ஏழைகளாக இருக்க மாட்டோம் குபேரர்களாக இருப்போம்.
இனி அடுத்த 16 மூடநம்பிக்கைகளைப் பார்ப்போம். இவைகளை பாம்பு கதைகள் என்று அவர் சொல்லுகிறார்
2.காஷ்மீரில் உள்ள ஒரு சிறிய வகை பாம்பு தான் ஊர்ந்து செல்லும் பாதையில் உள்ள பனிக்கட்டிகளை கரைக்கக்கூடிய நஞ்சு உடையது
3.நீங்கள் ஒரு பாம்பை கொன்றுவிட்டால் அதன் ஜோடி பாம்பு உங்களை தேடிப்பிடித்து பழிவாங்கும் உண்மை யாதெனில் பாம்பை கொல்லும்போது அதன் ஆசனவாயில் இருந்து மஸ்க் சுரப்பி மூலம் திரவம் வெளியாகிறது இதன் வாசனையால் மற்ற பாம்பு கவரப்பட்டு அருகில் வந்து மோப்பம் பிடிக்கும் சாதாரணமாக இத்தகைய வாசனைப் பொருள் இனச்சேர்க்கைக்கு உதவும்.
4. பாம்பு பால் குடிக்குமா? இயற்கையில் பாம்புகளுக்கு பால் எங்கிருந்து கிடைக்கும் ?உறிஞ்ச உறுப்புகள் இன்றி தனது பற்களால் பாலை எவ்வாறு உறிஞ்சும்? ஓரிரு தேக்கரண்டி பால் இதற்கு எவ்வாறு வலு அளிக்கும்? என்பது பெரிய கேள்விக் குறியே
5. இசைக்கு ஏற்ப பாம்புகள் நடனம் புரியும் என்கிறார்கள் காற்றில் மிதந்து வரும் ஒலி அலைகளை பாம்புகள் உணர வல்லவை என சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இவை இசையை ரசிக்க வல்லவை என்பதற்கு ஆதாரம் இல்லை.சொல்லப்போனால் செயற்கை அதிர்வுகளை இவை விரும்புவதில்லை.பாம்பாட்டியின் மகுடி இசையை வேடிக்கை பார்ப்பவர்கள் ரசிப்பதற்கு மட்டுமே.
6.சிலர் பாம்புகளுக்கு மீசை இருப்பதாகவும் சேவல் போன்ற கொண்டை இருப்பதாகவும் கூறுகிறார்கள். இது பாம்பாட்டி கட்டிவிடும் கதைகளை போன்றது. இவர்கள் பாம்பு தோல் உரிக்கும் போது பார்த்திருக்கக் கூடும். இது தாடைகளில் மேல்புறமாக தோலுரிக்கும்போது இந்த அபூர்வ காட்சியை கண்டு இருக்கக்கூடும்.
7. கண்கொத்திப் பாம்பு கண்ணைக் குத்தும் என்றும் நெற்றியில் தீண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நஞ்சற்ற இந்த பாம்பின் கூறிய மூக்கு மிருதுவாகவும் ரப்பர் போன்றும் இருக்கும். கண்கொத்திப் பாம்பு விரல் அல்லது மூக்கில் கொத்தி கடிபட்டவருக்கு தீவிர வலி உண்டாகுமே தவிர அது யாரையும் கண்ணில் கொத்தியதாக சரித்திரம் இல்லை.
8. உழவன் பாம்பு தீண்டினால் தொழுநோய் உண்டாகும் என்பது மற்றொரு கதை இப்பாம்புகளின் உடல் பாங்கம் தொழுநோய்ப்புண் போன்று திட்டுத்திட்டாக இருப்பதால் இந்தக் கதை கட்டப்பட்டிருக்கலாம் உண்மையில் பாம்புகள் பெரும்பாலும் நோயற்ற வாழ்வு வாழ்பவை.
9.தென்னிந்தியாவில் கொம்பேறி மூக்கன் நச்சுப்பாம்பு என்று தவறாக எண்ணப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒருவரை தீண்டிய பின் மரத்தின் மீதேறி தீண்டியவனின் பிணம் எரிகிறதா? என்றும் பார்க்குமாம். இதுவும் ஒரு கட்டுக்கதை.
10. சாரைப் பாம்புகள் பற்றிய கட்டுக்கதைகள் அதிகம். இவற்றுக்கு வாலில் கொட்டும் கொடுக்கு இருப்பதாகவும் பசுக்களை கொட்டும் என்றும் நெற்பயிரை சாய்த்து விடும் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள் இதன் வால் ஒரு கயிறு போன்று அமைந்துள்ளது என்பதே உண்மை
11.வளையம் போன்ற உடலமைப்புக் கொண்ட பாம்பு தீண்டினால் கடிபட்டவன் உடம்பெல்லாம் கட்டுகள் தோன்றும் என்பதும் கற்பனையே
12.இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் மனிதன் தூங்கும்போது கட்டுவிரியன் அவன் மூச்சை அடக்கி விடும் என்று நம்புகிறார்கள்.பண்ணை வேலையாள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கட்டு விரியன் கடித்தால் ஏற்படும் மூச்சுஇழப்பிற்கு இப்படி ஒரு கட்டுக்கதை
13. மகாராஷ்டிரத்தில் சுருட்டை விரியன்கள் 6 அடிவரை எழும்புமாம். இவை ஆறு இன்ச் (அரை அடி உயரம் )தான் எழும்ப வல்லவை என்பது உண்மை
14.மேற்கு கரையோரப் பகுதிகளில் ஒருவருக்கு தோட்டத்தில் நாகப்பாம்பு இருந்தால் அதிர்ஷ்டம் என்று நம்பப்படுகிறது. கேரளாவில் பல இந்துக்கள் வீடுகளில் பாம்புக்கு கோயில் கட்டி குலதய்வமாக வழிபடுகின்றனர்
15. நாகப்பாம்புகள் சாரைப் பாம்புகளுடன் இனச்சேர்க்கை புரியும் என்று கூறுகிறார்கள். உண்மையில் நாகப்பாம்புகள் தமது வகையைச் சார்ந்த பாம்புகளுடன் மட்டுமே இனச்சேர்க்கை புரியும் . இவைதன்னினம் உண்ணும் பெரிய சாரை பாம்புகளுடன் இனச்சேர்க்கை செய்யாது.
16. பாம்புக்கடிக்கு பலவித நாட்டு முறை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன மந்திரம் ஓதுதல், பச்சிலை வைத்தியம், தொலைபேசி சிகிச்சை என பல முறைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஒரு நம்பகமான சிகிச்சை நஞ்சு முறிவு மருந்து ஒன்று தான். மற்ற சிகிச்சைகள் யாவும் பயத்தை போக்கவும் அதிர்ச்சியில் இருந்து மீளவும் பயன்படுமேயன்றி நஞ்சுமுறி மருந்துக்கு மாற்றாக கொள்ளலாகாது
17. இருதலை மணியனுக்குவால் மொட்டையாக இருக்கும். எனவே இதற்கு இரு தலைகள் உள்ளன என்று கதை சொல்லப்படுகிறது இந்த மொட்டை வாலினை வெளிக்காட்டி தலையை மறைத்து கீரி போன்ற விலங்குகளை ஏமாற்றுவது போன்ற மனிதர்களையும் இது ஏமாற்றும். இது சில நம்பிக்கைகள் தான் இதேபோல இன்னும் எத்தனையோ உள்ளன. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications